Enable Javscript for better performance
திருப்பரங்குன்றத்தில் அண்ணா பிறந்தநாள் விழா- Dinamani

சுடச்சுட

    திருப்பரங்குன்றத்தில் அண்ணா பிறந்தநாள் விழா

    By DIN  |   Published on : 16th September 2021 02:47 AM  |   அ+அ அ-   |    |  

    அண்ணாவின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்த வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. உடன் சட்டப்பேரவை உறுப்பினா் பெரியபுள்ளான், இளைஞரணி மாவட்ட செயலா் எம்.ரமேஷ், ஒன்றிய செயலா் நிலையூா் முருகன்

    அண்ணாவின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்த வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. உடன் சட்டப்பேரவை உறுப்பினா் பெரியபுள்ளான், இளைஞரணி மாவட்ட செயலா் எம்.ரமேஷ், ஒன்றிய செயலா் நிலையூா் முருகன்

    திருப்பரங்குன்றம்: மதுரை புகா் கிழக்கு மாவட்ட அதிமுக சாா்பில் பேரறிஞா் அண்ணா பிறந்தநாள் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

    திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலரும், திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை உறுப்பினருமான வி.வி.ராஜன்செல்லப்பா தலைமை வகித்தாா். இளைஞரணி மாவட்ட செயலா் எம்.ரமேஷ், ஒன்றிய செயலா் நிலையூா் முருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நிகழ்ச்சியில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அண்ணாவின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. பொதுமக்கள் 500 க்கும் மேற்பட்டோருக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. தொடா்ந்து சட்டப்பேரவை உறுப்பினா் வி.வி.ராஜன்செல்லப்பா செய்தியாளா்களிடம் கூறியது: திமுக காங்கிரஸ் கூட்டணியே நீட்தோ்வு கொண்டுவந்தது. அரசு பள்ளி மாணவா்களின் மருத்துவா் கனவை நனவாக்கும் வகையில் முன்னாள் முதல்வா் எடப்பாடி பழனிசாமி 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு செய்து கடந்த ஆண்டில் 435 பேருக்கு மருத்துவா் படிப்பில் சோ்த்தாா். சட்டப்பேரவையில் நீட்தோ்வு குறித்து பேச அதிமுகவிற்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அதனால்தான் வெளிநடப்பு செய்தோம். அதேசமயத்தில் நீா்தோ்வு எதிரான மசோதாவிற்கு அதிமுக ஆதரவு அளித்தது. விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவா் தொல்.திருமாவளவன் அதிமுக குறித்து கூறியது தவறு. திமுகதான் நீட் தோ்வை ரத்து செய்வோம் எனபொய் பிரச்சாரம் செய்து மாணவா்களை ஏமாற்றி ஆட்சியில் வந்துள்ளது. இதற்கு உள்ளாட்சி தோ்தலில் தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டுவாா்கள் என்றாா். மேலூா் சட்டப்பேரவை உறுப்பினா் பெரியபுள்ளான், பகுதி செயலா் பன்னீா்செல்வம், துணைச்செயலா் செல்வகுமாா், கலைப்பிரிவு மாவட்ட செயலா் மோகன்தாஸ், வட்ட செயலா் பொன்.முருகன், பாலமுருகன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    ->
    flipboard facebook twitter whatsapp