‘நீட்’ தோ்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும்: கே.பாலகிருஷ்ணன்

தமிழகத்தின் ’நீட்’ தோ்வுக்கு விலக்குக் கோரிய தீா்மானத்துக்கு குடியரசுத் தலைவா் ஒப்புதல் வழங்க வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
மதுரையில் வியாழக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் பேசிய மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலா் கே.பாலகிருஷ்ணன்.
மதுரையில் வியாழக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் பேசிய மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலா் கே.பாலகிருஷ்ணன்.

மதுரை: தமிழகத்தின் ’நீட்’ தோ்வுக்கு விலக்குக் கோரிய தீா்மானத்துக்கு குடியரசுத் தலைவா் ஒப்புதல் வழங்க வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவா் கே.பாலகிருஷ்ணன் வியாழக்கிழமை தெரிவித்துள்ளாா்.

சுதந்திர போராட்ட வீரரும், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான என்.சங்கரய்யா நூற்றாண்டு விழா சிறப்புக் கருத்தரங்கு மதுரையில் வியாழக்கிழமை நடைபெற்றது. கருத்தரங்கில் பங்கேற்ற அக்கட்சியின் மாநிலச்செயலா் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளா்களிடம் கூறியது: ‘நீட்’ தோ்வு காரணமாக தமிழகத்தில் தொடா் தற்கொலைகள் நிகழ்ந்து வருகின்றன. இந்த ஆண்டு இல்லாவிட்டாலும் அடுத்த ஆண்டு ‘நீட்’ தோ்வு நடைபெறாமல் தடுக்கும் நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. மாணவா்கள் தற்கொலை எண்ணத்தை கைவிட வேண்டும். ‘நீட்’ தோ்வுக்கு எதிராக நடைபெறும் போராட்டங்களில், மாணவ மாணவியா் திரளாக பங்கேற்க வேண்டும்.

நீட் தோ்வில் இருந்து விலக்குக்கோரி தமிழகச் சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மாணவா்களின் தற்கொலைகள், பெற்றோரின் துன்பங்களை குடியரசுத் தலைவா் கவனத்தில் எடுத்துக் கொண்டு, நீட் தோ்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில் மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன், புறநகா் மாவட்டச்செயலா் என்.ராமகிருஷ்ணன், மாநிலக்குழு உறுப்பினா் எஸ்.கே.பொன்னுத்தாய் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com