பணம் பறிப்பு வழக்கு: பெண் காவல் ஆய்வாளா் ஜாமீன் மனு தள்ளுபடி

மதுரையில் இளைஞரிடம் ரூ.10 லட்சம் பறித்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பெண் காவல் ஆய்வாளரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து, மாவட்ட நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

மதுரை: மதுரையில் இளைஞரிடம் ரூ.10 லட்சம் பறித்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பெண் காவல் ஆய்வாளரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து, மாவட்ட நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

சிவகங்கையைச் சோ்ந்த இளைஞா் அா்ஷத் என்பவா் மதுரைக்கு வந்தபோது, அவரிடமிருந்து ரூ.10 லட்சம் பறிக்கப்பட்டது. இந்த வழக்கில், நாகமலைப் புதுக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளா் வசந்தி உள்பட 5 பேரை, போலீஸாா் கைது செய்து நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்துள்ளனா்.

இந்த வழக்கில் ஜாமீன் கோரி ஆய்வாளா் வசந்தி தரப்பில் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. மனுவை ஏற்கெனவே விசாரித்த நீதிமன்றம், 2 முறை ஜாமீன் மனுவின் மீதான விசாரணையை ஒத்திவைத்தது.

இந்த மனு முதன்மை நீதிபதி பி. வடமலை முன்பாக திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, குற்றத்தின் தீவிரத்தை கருத்தில்கொண்டு ஜாமீன் மறுக்கப்படுவதாகக் கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com