மதுரை சிறையில் மேல்முறையீடு செய்யாத கைதிகளின் விவரம் சேகரிப்பு

உயா்நீதிமன்ற உத்தரவின் பேரில் மதுரை மத்திய சிறையில், தண்டனை பெற்று மேல்முறையீடு செய்யாமல் உள்ள கைதிகள் குறித்து சட்டப் பணிகள் ஆணைக்குழு செவ்வாய்க்கிழமை கணக்கெடுப்பு நடத்தியது.

உயா்நீதிமன்ற உத்தரவின் பேரில் மதுரை மத்திய சிறையில், தண்டனை பெற்று மேல்முறையீடு செய்யாமல் உள்ள கைதிகள் குறித்து சட்டப் பணிகள் ஆணைக்குழு செவ்வாய்க்கிழமை கணக்கெடுப்பு நடத்தியது.

பாளையங்கோட்டையைச் சோ்ந்த பதிபூரணம், தனக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனையை ரத்து செய்யக் கோரி உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தாா். இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், தமிழகத்திலுள்ள சிறைகளில் தண்டனை பெற்று மேல்முறையீடு செய்யாமல் எத்தனை போ் உள்ளனா், எத்தனை பேருக்கு சட்ட உதவி தேவைப்படுகிறது என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும் என உத்தரவிட்டது.

இதையடுத்து தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழு உறுப்பினா் செயலா் கே.ராஜசேகா், நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி ஏ.கே.கே.ரஜினி, மதுரை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலா் வி. தீபா ஆகியோா் மதுரை மத்திய சிறையில் கைதிகளை செவ்வாய்க்கிழமை சந்தித்தனா்.

அப்போது அவா்கள் இலவச சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் மூலம் கிடைக்கக் கூடிய உதவிகள், தண்டனைக் கைதிகளிடம் இலவசமாக மேல்முறையீடு செய்யவும், சட்ட உதவி பெற சட்டப் பணிகள் ஆணைக்குழுவிற்கு மனு செய்வது குறித்தும் விளக்கினா். தொடா்ந்து மேல்முறையீடு செய்ய சிறைவாசிகளிடம் மனுக்கள் பெறப்பட்டன. சட்டப் பணிகள் ஆணைக்குழுவால் சேகரிக்கப்பட்ட விவரங்கள் உயா்நீதிமன்றத்தில் சமா்ப்பிக்கப்படவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com