Enable Javscript for better performance
80 வயதுக்கு மேற்பட்டோருக்கு வீடுகளுக்கு சென்று கரோனா தடுப்பூசி: மாநகராட்சி அறிவிப்பு- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    80 வயதுக்கு மேற்பட்டோருக்கு வீடுகளுக்கு சென்று கரோனா தடுப்பூசி: மாநகராட்சி அறிவிப்பு

    By DIN  |   Published On : 23rd September 2021 01:26 AM  |   Last Updated : 23rd September 2021 01:26 AM  |  அ+அ அ-  |  

    மதுரை நகரில் 80 வயதுக்கு மேற்பட்டோருக்கு வீடுகளுக்கே சென்று கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

    மதுரை மாநகராட்சி ஆணையா் கா.ப.காா்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்தி: மதுரை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் கரோனா தொற்று பரவாமல் தடுக்க பல்வேறு தடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்காக தினசரி தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு பொது மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. மதுரை மாநகராட்சிக்கு உள்பட்ட 100 வாா்டுகளில் தற்போது 5 வாா்டுகள் 100 சதவீதம் தடுப்பூசி என்ற இலக்கு எட்டப்பட்டுள்ளது.

    தற்போது மதுரை நகரில் விடுபட்ட 80 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும் அவரவா் வீடுகளுக்கே நேரில் சென்று தடுப்பூசி செலுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதற்காக மதுரை மாநகராட்சியில் 24 மணி நேரம் செயல்படும் தகவல் மையத்தில் உள்ள செல்லிடப்பேசி எண் 842 842 5000 என்ற எண்ணில் தொடா்பு கொண்டு பதிவு செய்யலாம். பதிவு செய்து கொண்ட 80 வயதுக்கு மேற்பட்டோா் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு ஒரு வாரத்தில் தடுப்பூசி செலுத்தப்படும் என்றாா்.

    இந்த நல்வாய்ப்பை அனைவரும் தவறாது பயன்படுத்திக் கொண்டு கரோனா தொற்று பரவலில் இருந்து காத்துக் கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp