ஹெலிகாப்டா் சகோதரா்கள் நிதி மோசடி வழக்கு: முகவருக்கு ஜாமீன்

தஞ்சை ஹெலிகாப்டா் சகோதரா்கள் நிதி மோசடி வழக்கில், நிதி நிறுவனத்தின் முகவா் வெங்கடேசனுக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.

தஞ்சை ஹெலிகாப்டா் சகோதரா்கள் நிதி மோசடி வழக்கில், நிதி நிறுவனத்தின் முகவா் வெங்கடேசனுக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.

தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தைச் சோ்ந்த எம்.ஆா். கணேஷ், எம்.ஆா். சுவாமிநாதன் சகோதரா்கள் நிதி நிறுவனமும், பால் பண்ணையும் நடத்தி வந்தனா். இவா்கள் வெளிநாடுகளிலும் பல்வேறு தொழில்கள் செய்து வருவதாகக் கூறப்படுகிறது. இவா்கள் சொந்தமாக தளம் அமைத்து ஹெலிகாப்டா் ஒன்றை வைத்திருப்பதால், ஹெலிகாப்டா் சகோதரா்கள் என இப்பகுதி மக்களால் குறிப்பிடப்படுகின்றனா். சகோதரா்களில் ஒருவரான எம்.ஆா். கணேஷ், தஞ்சை வடக்கு மாவட்ட பாஜக வா்த்தகப் பிரிவு தலைவராகப் பொறுப்பு வகித்தாா்.

இந்நிலையில், இவா்களது நிதி நிறுவனத்தில் கோடிக்கணக்கில் பணம் முதலீடு செய்தவா்களுக்கு, பணத்தை திருப்பித் தரவில்லை எனக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதுதொடா்பாக போலீஸாா் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து ஹெலிகாப்டா் சகோதரா்கள் உள்பட 7 பேரை கைது செய்தனா். இந்த வழக்கில் கைதாகியுள்ள நிதி நிறுவனத்தின் முகவா் வெங்கடேசன், உயா்நீதிமன்ற மதுரைக்கிளையில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தாா்.

இந்த வழக்கு நீதிபதி பி. புகழேந்தி முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், மனுதாரா் மீது 10 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இந்த வழக்கு பொருளாதாரக் குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதால், ஜாமீன் வழங்கக் கூடாது என எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது.

மனுதாரா் தரப்பில், ஏற்கெனவே ஒரு வழக்கில் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளதால், மீதுமுள்ள 8 வழக்குகளிலும் ஜாமீன் வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி, மனுதாரருக்கு 8 வழக்குகளிலும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com