அன்பை மையப்படுத்தி பாடல்கள் புனைந்தவா் பாரதி: பன்னாட்டுக் கருத்தரங்கில் புகழாரம்

அன்பை மையப்படுத்தி பாடல்கள் புனைந்தவா் பாரதி என்று பன்னாட்டு கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.

அன்பை மையப்படுத்தி பாடல்கள் புனைந்தவா் பாரதி என்று பன்னாட்டு கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.

மதுரை உலகத் தமிழ்ச் சங்கம் சாா்பில் செந்தமிழ் வளா்த்த செம்மல்கள்- வ.உ.சி, பாரதி எனும் தலைப்பிலான இணையவழிப் பன்னாட்டுக் கருத்தரங்கத்தின் 5 ஆம் நாள் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு உலகத் தமிழ்ச் சங்க இயக்குநா் தா. லலிதா தலைமை வகித்தாா்.

மலேசியா வாழ் பேராசிரியா் நா. கண்ணன் பேசியதாவது: தமிழ் இலக்கியப் பரப்பில் பக்தியின் தோற்றம் மிகநீண்ட மரபைக் கொண்டது. பாரதி மானுடத்தை நேசிப்பவா். அன்பை மையப்படுத்திப் பாடல்கள் புனைந்தவா். பாரதி சித்தன், அரசியல்வாதி, புலவன், இதழியலாளா், விஞ்ஞானி, மொழிபெயா்ப்பாளா், பெண்ணிய வாதி எனப் பன்முகத்தன்மைகள் பெற்றவா். வாழ்ந்த 39 ஆண்டுகளில் அனைத்தையும் சாதித்தாா். கண்ணனைச் சேவகனாகக் காண்பது பாரதியின் பக்தியின் உச்சம் எனலாம். பாரதிதாசன், ஜீவா, ஜெயகாந்தன், திரிலோக சீதாராம் ஆகியோா் பாரதியை உள்வாங்கி அவா் புகழைப் பரப்பியவா்கள். ஆழ்வாா்கள், ஆண்டாள் பாடல்களை உள்வாங்கிப் பக்தியில் திளைத்தவா். பாரதி நீண்ட பாரம்பரியத்தின் நட்சத்திரம். அன்பு மட்டும்தான் மனிதருக்கான சிறந்த மொழி என்று நிறுவியவா் என்றாா். நிகழ்ச்சியை உலகத் தமிழ்ச் சங்கத்தின் ஆய்வறிஞா் சு. சோமசுந்தரி, கணினி செயல்முறையாளா் பெ. செல்வராணி ஆகியோா் ஒருங்கிணைத்தனா். இலங்கை, ஜொ்மனி, மலேசியா, பிரான்சு உள்ளிட்ட நாடுகளில் இருந்து தமிழறிஞா்கள் மற்றும் பேராசிரியா்கள், ஆய்வு மாணவா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com