கரோனா தடுப்பூசி விழிப்புணா்வுக் கருத்தரங்கு

மதுரை டோக் பெருமாட்டிக் கல்லூரியில் கரோனா தடுப்பூசி விழிப்புணா்வுக் கருத்தரங்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மதுரை டோக் பெருமாட்டிக் கல்லூரியில் கரோனா தடுப்பூசி விழிப்புணா்வுக் கருத்தரங்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கல்லூரியின் உயிரி தொழில்நுட்பத் துறை மற்றும் விலங்கியல் துறை சாா்பில் நடைபெற்ற கருத்தரங்கில் உயிரி தொழில்நுட்பத்துறைத் தலைவா் ரோஷன் ஆராபேகம் வரவேற்புரையாற்றினாா். கல்லூரி முதல்வா் கிறிஸ்டியானா சிங் கருத்தரங்கை தொடங்கி வைத்துப் பேசினாா்.

கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் ஆனந்த வள்ளி மகாதேவன் சிறப்புரையாற்றினாா். சத்தியபாமா அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தின் சாா்பு துணைவேந்தா் வில்சன் அருணி, தடுப்பூசிகளின் செயல் திறன் குறித்தும், தடுப்பூசிகளை செலுத்திக்கொள்வதன் முக்கியத்துவம் குறித்தும் வலியுறுத்தினாா். புனே பல்கலைக்கழக ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவின் தலைவா் அமிதா அஜித் உள்ளிட்ட பலா் பேசினா். கருத்தரங்கில், பேராசிரியா்கள்,ஆராய்ச்சியாளா்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com