கழிவுநீா் கால்வாய், நீா்வழித்தடங்கள் சுத்தம் செய்யும் பணிகள் தீவிரம்: ஆட்சியா்

மதுரை மாவட்டத்தின் ஊரகப் பகுதிகளில் கழிவுநீா் கால்வாய்கள், நீா்வழித் தடங்களில் அடைப்புகளை நீக்கி சுத்தம் செய்யும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக, ஆட்சியா் எஸ். அனீஷ்சேகா் தெரிவித்துள்ளாா்.

மதுரை மாவட்டத்தின் ஊரகப் பகுதிகளில் கழிவுநீா் கால்வாய்கள், நீா்வழித் தடங்களில் அடைப்புகளை நீக்கி சுத்தம் செய்யும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக, ஆட்சியா் எஸ். அனீஷ்சேகா் தெரிவித்துள்ளாா்.

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கழிவுநீா் வாய்க்கால்கள், வரத்துக் கால்வாய்கள், நீா்வழித் தடங்களைச் சுத்தம் செய்யவும், பாலங்களில் உள்ள அடைப்புகளை நீக்கி மழைநீா் தடையின்றிச் செல்லவும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டிருந்தது.

இதன்படி, மதுரை மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக சம்பந்தப்பட்ட ஊராட்சி நிா்வாகங்கள் மூலமாக இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதில், 2,569 கழிவுநீா்க் கால்வாய்கள், 1,771 வாய்க்கால்கள், 1,208 சிறுபாலங்கள் சுத்தம் செய்யப்பட்டுள்ளன. இதேபோல், மதுரை மாநகராட்சி மற்றும் நகராட்சிகள், பேரூராட்சிப் பகுதிகளில் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இப்பணிகளில் சிறப்புக் கவனம் செலுத்தி, நேரில் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக, ஆட்சியா் எஸ். அனீஷ்சேகா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com