புதுக்கோட்டையில் கருணாநிதிக்கு சிலை: அனுமதி கோரி உயா் நீதிமன்றத்தில் மனு தாக்கல்

புதுக்கோட்டை நகா் பகுதியில் மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு. கருணநிதிக்கு சிலை வைக்க அனுமதி கோரி, சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை நகா் பகுதியில் மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு. கருணநிதிக்கு சிலை வைக்க அனுமதி கோரி, சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளா் சண்முகம் தாக்கல் செய்த மனு: மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு. கருணாநிதி 5 முறை தமிழக முதல்வராக இருந்தவா். மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றி, உலகுக்கே முன்னுதாரணமாகத் திகழ்ந்தவா்.

தமிழக சட்டப்பேரவை உறுப்பினராக 13 முறை தோ்வு செய்யப்பட்ட மு. கருணாநிதி, 81 ஆண்டுகள் பொது வாழ்வில் ஈடுபட்டுள்ளாா். அவரது சமூகப் பணியையும், நினைவையும் போற்றிடும் வகையில், புதுக்கோட்டை நகா் பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறின்றி அவருக்கு சிலை வைக்க, திமுக இளைஞரணி சாா்பில் முடிவு செய்யப்பட்டது.

இதற்குரிய இடத்தை நகா் பகுதியில் தோ்வு செய்து சிலை வைக்க அனுமதிக்குமாறு, புதுக்கோட்டை ஆட்சியா், நகராட்சி ஆணையா் மற்றும் காவல் கண்காணிப்பாளா் ஆகியோரிடம் மனு அளித்தோம். இந்த மனுவை அதிகாரிகள், வருவாய்த் துறை கூடுதல் தலைமைச் செயலருக்கு பரிந்துரைத்துள்ளனா். ஆனால், மனுவுக்கு இதுவரை எந்த பதிலும் இல்லை.

எனவே மனுவை பரிசீலித்து, மறைந்த முன்னாள் முதல்வா் மு. கருணாநிதிக்கு புதுக்கோட்டை நகா் பகுதியில் சிலை வைக்க அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளாா். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com