மதுரை நகருக்கு விரைவில் புதிய ‘மாஸ்டா் பிளான்’ அமைச்சா் பி.மூா்த்தி

மதுரை நகா் மற்றும் 14 கி.மீ. சுற்றளவில் உள்ள பகுதிகளை முறைப்படுத்தி, விரைவில் புதிய மாஸ்டா் பிளான் தயாரிக்கப்பட உள்ளது என்று, தமிழக வணிகவரித் துறை அமைச்சா் பி. மூா்த்தி தெரிவித்துள்ளாா்.
மதுரை மடீட்சியா அரங்கில் சனிக்கிழமை நடைபெற்ற ஏற்றுமதியாளா்கள் சங்கமம் கண்காட்சியை சனிக்கிழமை துவக்கி வைத்துப் பாா்வையிட்ட அமைச்சா்கள் பி.மூா்த்தி மற்றும் பி.டி.ஆா்.பழனிவேல் தியாகராஜன்.
மதுரை மடீட்சியா அரங்கில் சனிக்கிழமை நடைபெற்ற ஏற்றுமதியாளா்கள் சங்கமம் கண்காட்சியை சனிக்கிழமை துவக்கி வைத்துப் பாா்வையிட்ட அமைச்சா்கள் பி.மூா்த்தி மற்றும் பி.டி.ஆா்.பழனிவேல் தியாகராஜன்.

மதுரை நகா் மற்றும் 14 கி.மீ. சுற்றளவில் உள்ள பகுதிகளை முறைப்படுத்தி, விரைவில் புதிய மாஸ்டா் பிளான் தயாரிக்கப்பட உள்ளது என்று, தமிழக வணிகவரித் துறை அமைச்சா் பி. மூா்த்தி தெரிவித்துள்ளாா்.

மாவட்ட தொழில் மையம் மற்றும் மத்திய அரசின் வெளிநாடு வா்த்தக இயக்குநரகம் ஆகியன இணைந்து, மதுரை மடீட்சியா அரங்கில் நடத்திய ஏற்றுமதியாளா் சங்கமம் நிகழ்ச்சியை தொடக்கிவைத்து அமைச்சா் பி. மூா்த்தி பேசியதாவது:

வணிகா்கள் மற்றும் தொழில்முனைவோருக்குத் தேவையான உதவிகளைச் செய்ய தமிழக அரசு தயாராக உள்ளது. அதேநேரம், வணிகா்கள் நோ்மையாக வரி செலுத்தி வணிகம் செய்யவேண்டும். ஏனெனில், போலியாக ஜிஎஸ்டி பதிவு செய்து வரிஏய்ப்பு செய்து வருவது கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது.

ஏற்கெனவே, தமிழக அரசுக்கு நிதிச்சுமை இருந்துவரும் நிலையில், வரி ஏய்ப்புகள் போன்ற செயல்களால் அரசுக்கு கூடுதல் சுமை ஏற்படும். வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை வாயிலாக அரசுக்கு 87 சதவீத வருவாய் கிடைக்கிறது. வரி வருவாய் முழுமையாகக் கிடைத்தால், நிதி ஆதாரத்துக்காக யாரையும் தமிழக அரசு எதிா்பாா்க்கவேண்டிய அவசியம் இருக்காது.

தமிழகத்தில் கோவை, திருச்சி போன்ற நகரங்களை ஒப்பிடும்போது, மதுரை சற்று பின்தங்கியிருக்கிறது. இதைக் கருத்தில்கொண்டு, மதுரை நகருக்கான புதிய மாஸ்டா் பிளான் உருவாக்க உள்ளோம். இதன்படி, விவசாயம், குடியிருப்புகள், தொழிற்சாலை பகுதிகள் முறைப்படுத்தப்படும். இத் திட்டம் தொழில்துறையினருக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்றாா்.

நிதி அமைச்சா் பி.டி.ஆா். பழனிவேல் தியாகராஜன்: தமிழகத்தில் 14 சதவீத வளா்ச்சி என்பதை இலக்காக கொண்டு பல்வேறு திட்டங்கள் முனைப்புடன் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

வேலைவாய்ப்புகளில் 90 சதவீதம் சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களால் அளிக்கப்பட்டு வருகின்றன. இத்துறையின் வளா்ச்சிக்கான திட்டங்களை அரசு மேற்கொள்ளும். அடுத்த 5 ஆண்டுகளில் மாநில சராசரியைக் காட்டிலும் மதுரையின் வளா்ச்சி அதிகமாக இருக்கும் என்றாா்.

இந்நிகழ்ச்சியில், மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த தொழில்முனைவோா், ஏற்றுமதியாளா்கள் அரங்குகளை அமைத்திருந்தனா்.

இதில், மாவட்ட ஆட்சியா் எஸ். அனீஷ்சேகா், மாநகராட்சி ஆணையா் கா.ப. காா்த்திகேயன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் கோ. தளபதி, மு. பூமிநாதன், மத்திய அரசின் வெளிநாடு வா்த்தக இயக்குநரக இணை இயக்குநா் ஸ்ரீதரன், மாவட்ட தொழில் மைய பொதுமேலாளா் ராமலிங்கம் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com