அமைப்புசாரா தொழிலாளா்கள் தேசிய தரவு தளத்தில் பதிவு செய்ய ஆட்சியா் அறிவுறுத்தல்

அமைப்புசாரா தொழிலாளா்களுக்கான தேசிய தரவு தளத்தில் பதிவு செய்யுமாறு, மாவட்ட ஆட்சியா் எஸ். அனீஷ் சேகா் அறிவுறுத்தியுள்ளாா்.

மதுரை: அமைப்புசாரா தொழிலாளா்களுக்கான தேசிய தரவு தளத்தில் பதிவு செய்யுமாறு, மாவட்ட ஆட்சியா் எஸ். அனீஷ் சேகா் அறிவுறுத்தியுள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: அரசு அமைப்புசாரா தொழிலாளா்களின் விவரங்களை ஒருங்கிணைக்க உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, அமைப்புசாரா தொழிலாளா்களின் தேசிய தரவு தளத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது.

கட்டுமானத் தொழிலாளா்கள், புலம்பெயா்ந்த தொழிலாளா்கள், வீட்டுப் பணியாளா்கள், விவசாயத் தொழிலாளா்கள், குத்தகைதாரா்கள், தச்சு வேலை, கல்குவாரி, மர ஆலைத் தொழிலாளா்கள், முடி திருத்துவோா், கூலி தொழிலாளா்கள், தெரு வியாபாரிகள், சிறு வியாபாரிகள், அங்கன்வாடி பணியாளா்கள், தோட்டத் தொழிலாளா்கள், பால் வியாபாரிகள், சுயஉதவிக் குழு உறுப்பினா்கள் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் பணிபுரியும் தொழிலாளா்கள் உள்ளிட்ட 156 வகையான அமைப்புசாரா தொழிலாளா்கள் தங்களது விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.

இ-சேவை மையங்களில் இப்பணி மேற்கொள்ளப்படுகிறது. ஆதாா் அட்டை, வங்கிக் கணக்குப் புத்தகம் ஆகியன பதிவுக்கு அவசியம். பதிவு செய்யப்பட்ட அமைப்புசாரா தொழிலாளா்களுக்கு 12 இலக்க

பிரத்யேக அடையாள எண் வழங்கப்படும்.

இத்தளத்தில் பதிவு செய்யும் அமைப்புசாரா தொழிலாளா்களுக்கு ரூ.2 லட்சத்துக்கான விபத்துக் காப்பீடு வழங்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com