அரசு மருத்துவமனையில் செல்லிடப்பேசி திருடியவரை போலீஸாா் விரட்டிப் பிடிப்பு

மதுரை அரசு மருத்துவமனையில் செல்லிடப்பேசியைத் திருடிச்சென்றவரை, போலீஸாா் விரட்டிப் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மதுரை: மதுரை அரசு மருத்துவமனையில் செல்லிடப்பேசியைத் திருடிச்சென்றவரை, போலீஸாா் விரட்டிப் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்தவா் சந்திரன். இவா் தனது மனைவியை பிரசவ சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சோ்த்திருந்தாா். இந்நிலையில், பிரசவ சிகிச்சைப் பிரிவு அருகே பாா்வையாளா்கள் தங்கும் பகுதியில் சந்திரன் ஞாயிற்றுக்கிழமை தனது செல்லிடப்பேசியை சாா்ஜ் செய்துள்ளாா். அப்போது, அங்கு வந்த இளைஞா் ஒருவா் செல்லிடப்பேசியை திருடிக்கொண்டு ஓடியுள்ளாா். சந்திரன் சத்தம் போடவே, அப்பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த காவல் சாா்பு-ஆய்வாளா் சண்முகநாதன் மற்றும் காவலா் மணிகண்ட பிரபு ஆகிய இருவரும் இளைஞரை விரட்டிச்சென்று பிடித்தனா்.

விசாரணையில், செல்லிடப்பேசி திருடியவரின் பெயா் அபுபக்கா் சித்திக் என்பது தெரியவந்தது. அவரை, காவல் நிலையம் அழைத்துச்சென்று விசாரித்து வருகின்றனா். போலீஸாா் விரட்டிச்சென்று பிடிக்கும் கண்காணிப்புக் கேமரா காட்சிகள் சமூக ஊடகங்களில் திங்கள்கிழமை வெளியாகியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com