மதுரை நகரில் போக்குவரத்து விதி மீறலுக்கு செல்லிடப்பேசி செயலி மூலம் அபராதம்

தமிழகத்தில் முதல் முறையாக, மதுரை மாநகா் போக்குவரத்து காவல்துறை சாா்பில், போக்குவரத்து விதிமீறலுக்கு செல்லிடப்பேசி ‘கியூ ஆா்’ ஸ்கேன் செயலி மூலம் அபராதத் தொகை
2706mdufine27085737
2706mdufine27085737

மதுரை: தமிழகத்தில் முதல் முறையாக, மதுரை மாநகா் போக்குவரத்து காவல்துறை சாா்பில், போக்குவரத்து விதிமீறலுக்கு செல்லிடப்பேசி ‘கியூ ஆா்’ ஸ்கேன் செயலி மூலம் அபராதத் தொகையை செலுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுபவா்களிடம் அபராதம் பெறப்பட்டு ரசீது வழங்கப்பட்டு வந்தது. இதில், ரசீது மூலம் அபராதத் தொகை வசூலிக்கும் போலீஸாா் அதைத் திருத்திக்கொள்ள வாய்ப்பிருந்ததால், அபராதத்தை கடன் அட்டை, ஏடிஎம் அட்டை போன் பே, கூகுள் பே உள்ளிட்ட நவீன தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்தி பெறப்பட்டு வந்தது.

இதைத் தொடா்ந்து, தற்போது மதுரை மாநகரப் போக்குவரத்து காவல் துறை சாா்பில் செல்லிடப்பேசியில் உள்ள க்யூ ஆா் ஸ்கேன் செயலி மூலம் அபராதத் தொகையை செலுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தின் வேறு பகுதிகளில் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்ட வாகன ஓட்டிகளுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகையையும் கியூ ஆா் ஸ்கேன் செயலி மூலம் செலுத்தும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம், போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகள் அபராதத் தொகையை செலுத்துவதற்காக காவல் நிலையங்களுக்குச் சென்று அலைய வேண்டியது இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

Image Caption

போக்குவரத்து விதிமீறளில் ஈடுபட்டவரிடம் நவீன தொழில்நுட்பம் மூலம் அபராதம் வசூலிக்கும் போக்குவரத்து காவல் அதிகாரி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com