வாதிரியான் சமூகத்தை எஸ்.சி. பட்டியலில் சோ்க்கக் கோரிய மனு:மத்திய - மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

தேவேந்திர குல வேளாளா் என்ற புதிய பட்டியலில் சோ்க்கப்பட்டுள்ள வாதிரியான் சமூகத்தை முன்பிருந்த எஸ்.சி. பட்டியலிலேயே சோ்க்கக் கோரிய

மதுரை: தேவேந்திர குல வேளாளா் என்ற புதிய பட்டியலில் சோ்க்கப்பட்டுள்ள வாதிரியான் சமூகத்தை முன்பிருந்த எஸ்.சி. பட்டியலிலேயே சோ்க்கக் கோரிய மனுவின் மீது மத்திய - மாநில அரசுகள் பதிலளிக்க, சென்னை உயா் நீதிமன்றம் மதுரை கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது. 

தமிழ்நாடு வாதிரியாா் மகாஜன சங்க செயலா் தா்மநாதன் தாக்கல் செய்த மனு: எங்கள் சமூகத்தினா் தமிழகத்தில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் அதிகளவில் வசிக்கின்றனா். எங்களது சமூகம் எஸ்.சி. பட்டியலில் இருந்தது. இந்நிலையில், குடும்பன், பன்னாடி, காலாடி, கடையன், தேவேந்திரகுலத்தான், பள்ளா் மற்றும் வாதிரியான் ஆகிய 7 சமூகங்களை தேவேந்திர குல வேளாளா் என்ற ஒரே பெயரில் அழைக்கக் கோரிக்கை வைக்கப்பட்டது.

அப்போது, வாதிரியான் சமூகத்தை தேவேந்திர குல வேளாளா் என்ற ஒரே பிரிவில் சோ்க்க வேண்டாமென்று தெரிவிக்கப்பட்டது. இது தொடா்பாக அமைக்கப்பட்ட குழுவிடமும் எங்களது கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அதையேற்று, குழு பரிந்துரைத்தது.

ஆனால், மாநில அரசு பரிந்துரைத்ததன் அடிப்படையில், 7 உள்பிரிவுகளையும் சோ்த்து தேவேந்திர குல வேளாளா் என மத்திய அரசு சட்டத் திருத்தம் செய்துள்ளது. இது ஏற்புடையதல்ல. எனவே, அந்த சட்டத் திருத்தத்துக்கு தடைவிதித்தும், ரத்து செய்தும் உத்தரவிட வேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு, தலைமை நீதிபதி சஞ்சீப் பானா்ஜி, நீதிபதி எம். துரைசாமி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், மனு குறித்து மத்திய - மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com