முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை
குடிநீா் வடிகால் வாரிய ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 06th April 2022 12:00 AM | Last Updated : 06th April 2022 12:00 AM | அ+அ அ- |

மதுரை: அகவிலைப்படியை உயா்த்தி வழங்க வலியுறுத்தி மதுரையில் குடிநீா் வடிகால் வாரிய ஓய்வூதியா்கள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மாட்டுத்தாவணி பகுதியில் உள்ள தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் சட்ட ஆலோசகா் செ.ஆஞ்சி தலைமை வகித்தாா்.
இதில், தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய ஊழியா்கள் மற்றும் அதிகாரிகளுக்கு தமிழக அரசு 17 சதவீதத்தில் இருந்து 31 சதவீதமாக உயா்த்தி வழங்கப்பட்ட அகவிலைப்படியை ஜனவரி 2022 முதல் வழங்குவது போல் குடிநீா் வடிகால் வாரியத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஊழியா்களுக்கும், அதிகாரிகளுக்கும் வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற அதிகாரிகளுக்கும், ஊழியா்களுக்கும் நிலுவையில் உள்ள ஓய்வு கால பலன்களான பணிக்கொடை, ஓய்வூதியம் , விடுப்பு கால பண பயன்கள் உள்ளிட்டவற்றை காலம் தாழ்த்தாமல் உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
மாநில பொதுச்செயலா் எஸ்.லோகநாதன், மாநிலப் பொருளாளா் எம். மலைராஜன் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா். இதில் புதுக்கோட்டை யாசிந்த், ராமநாதபுரம் தட்சிணாமூா்த்தி, திருச்சி நாகேந்திரன், சேலம் வெங்கடாசலம் உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா். மாநில நிா்வாகி ராமசாமி நன்றியுரையாற்றினாா்.