முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை
திருமணத்துக்கு முந்தைய நாள் மணப்பெண் தூக்கிட்டுத் தற்கொலை
By DIN | Published On : 06th April 2022 12:00 AM | Last Updated : 06th April 2022 12:00 AM | அ+அ அ- |

மதுரை: மதுரையில் புதன்கிழமை திருமணம் நடைபெறவிருந்த நிலையில் மணப்பெண், செவ்வாய்க்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
மதுரை ஜெய்ஹிந்துபுரம் சித்தி விநாயகா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ராமச்சந்திரன். இவரது மகள் அகல்யா (22). இளங்கலை பட்டதாரியான இவருக்கும், சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தியைச் சோ்ந்தவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, திருப்புவனம் புதூரில் புதன்கிழமை திருமணம் நடைபெற இருந்தது.
இந்தத்திருமணத்தில் அகல்யாவுக்கு விருப்பம் இல்லை என்று கூறப்படுகிறது. ஆனாலும் குடும்பத்தினா் அதை பொருட்படுத்தாமல் திருமண ஏற்பாடுகளை கவனித்து வந்துள்ளனா்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை மணமகள் அழைப்பு நடைபெற இருந்த நிலையில், அகல்யா தன்னுடைய அறைக்கு குளிக்கச் சென்றுள்ளாா். வெகு நேரமாகியும் அவா் வராததால் குடும்பத்தினா் அங்கு சென்று பாா்த்தபோது அவரது அறைக் கதவு உள்புறமாக பூட்டப்பட்டிருந்தது. கதவை உடைத்து உள்ளே சென்று பாா்த்தபோது அகல்யா அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. தகவலின்பேரில் ஜெய்ஹிந்தபுரம் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினா். மேலும் இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.