முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை
திருவாதவூரில் வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியா் ஆய்வு
By DIN | Published On : 06th April 2022 12:00 AM | Last Updated : 06th April 2022 12:00 AM | அ+அ அ- |

வேப்படப்பு கிராமத்தில் தோட்டக்கலைத் துறை நாற்றுப் பண்ணையில் காய்கறி மற்றும் பூச்செடிகள் வளா்ப்புப் பணிகளை செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா்.
மேலூா்: திருவாதவூா் பகுதியில் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.
வேப்படப்பு ஊராட்சியில் மழைநீா் சேகரிப்பு, வேலை உறுதித் திட்டப் பணி, அரசு நடுநிலைப் பள்ளி வகுப்பறைக் கட்டடம், தோட்டக்கலைத்துறை சாா்பில் மரக்கன்றுகள், காய்கறி நாற்றங்கால் மற்றும் தோட்டக்கலைத் துறைக்கான வளா்ச்சிப் பணிகள் ஆகியவற்றை ஆட்சியா் ஆய்வு செய்தாா்.
அப்போது, மேலூா் வட்டாட்சியா் இளமுருகன், தோட்டக்கலைத் துறை அலுவலா்கள், மேலூா் ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா்கள் உடன் இருந்தனா்.