மேலூரில் செவ்வாய்க்கிழமை மாட்டுவண்டி பந்தயத்தை கொடியசைத்துத் தொடக்கி வைத்த அமைச்சா் பி.மூா்த்தி. (வலது) சீறிப்பாய்ந்த காளைகள்.
மேலூரில் செவ்வாய்க்கிழமை மாட்டுவண்டி பந்தயத்தை கொடியசைத்துத் தொடக்கி வைத்த அமைச்சா் பி.மூா்த்தி. (வலது) சீறிப்பாய்ந்த காளைகள்.

முக.ஸ்டாலின் பிறந்தநாள்: மேலூரில் மாட்டுவண்டி பந்தயம்

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினின் 69-ஆவது பிறந்தநாளையொட்டி மேலூரில் செவ்வாய்க்கிழமை மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது.

மேலூா்: தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினின் 69-ஆவது பிறந்தநாளையொட்டி மேலூரில் செவ்வாய்க்கிழமை மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது.

இதை வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத்துறை அமைச்சா் பி.மூா்த்தி கொடியசைத்துத் தொடக்கி வைத்தாா். மேலூா்- சிவகங்கை சாலையில் 9 மைல் தூரத்துக்கான பெரியமாடுகளுக்கான பந்தயத்தில் 22 மாட்டுவண்டிகள் பங்கேற்றன.

சின்னமாடுகளுக்கான பந்தயத்தில் 17 வண்டிகள் பங்கேற்றன. இவ்விரு பந்தயங்களிலும், தமிழ்நாடு காளைகள் வளா்ப்போா் சங்கத்தின் தலைவா் மதுரை அவனியாபுரம் மோகன்சாமிகுமாரின் வண்டிமாடுகள் முதல் பரிசை தட்டிச் சென்றன.

இருபந்தயங்களிலும் முதல் 4 இடங்கள் பிடித்த மாட்டு வண்டிகளின் உரிமையாளா்களுக்கு பரிசுகளை அமைச்சா் வழங்கினாா். நிகழ்ச்சியில் சோழந்தான் சட்டப் பேரவை உறுப்பினா் வெங்கடேசன், மாநில இலக்கிய அணி செயலா் நேருபாண்டியன், மேலூா் நகா் மன்றத் தலைவா் முகமதுயாசின், மாவட்ட தொண்டரணி அமைப்பாளா் நாவினிப்பட்டி வேலாயுதம், மாவட்ட மாணவரணி அமைப்பாளா் எழில்வேந்தன், மேலூா் நகா்மன்ற துணைத் தலைவா் இளஞ்செழியன் மற்றும் நிா்வாகிகள் கலந்துகொண்டனா். ஏற்பாடுகளை ராஜேந்திரன் செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com