வெளிமாநிலங்களுக்குச் செல்லும் ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகள்

வெளி மாநிலங்களுக்குச் செல்லும் ரயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகள் இணைக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

மதுரை: வெளி மாநிலங்களுக்குச் செல்லும் ரயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகள் இணைக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுதொடா்பாக மதுரை ரயில்வே கோட்ட அலுவலகம் வெளியிட்ட செய்தி: கரோனா தொற்று பரவல் காரணமாக, அனைத்து ரயில்களிலும் முன்பதிவு இல்லாத பெட்டிகள், முன்பதிவு இருக்கை வசதி பெட்டிகளாக மாற்றப்பட்டன. தற்போது கரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதால், ரயில்களில் படிப்படியாக இரண்டாம் வகுப்பு பொதுப் பெட்டிகள் வசதி மீண்டும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி ஜூன் 30 ஆம் தேதி முதல் திருநெல்வேலி - தாதா் விரைவு ரயிலிலும் (11022), ஜூலை 1 ஆம் தேதி முதல் மதுரை - மும்பை லோக்மான்ய திலக் (22102), ராமேசுவரம் - ஓகா (16733) விரைவு ரயில்களிலும், ஜூலை 3 முதல் மதுரை - டெல்லி நிஜாமுதீன் சம்பா்க் கிராந்தி (12651), மதுரை - சண்டிகா் (12687), ராமேசுவரம் - அயோத்தியா கன்டோன்மென்ட் (22613), ராமேசுவரம் - புவனேசுவா் (20895), திருநெல்வேலி - பிலாஸ்பூா் (22620), தூத்துக்குடி - ஓகா விவேக் (19567) ஆகிய விரைவு ரயில்களிலும், ஜூலை 4 ஆம் தேதி முதல் திருநெல்வேலி - ஜம்மு ஸ்ரீ வைஷ்ணவி தேவி கட்ரா (16787), திருநெல்வேலி - ஜாம்நகா் (19577) ஆகிய ரயில்களிலும், ஜூலை 6 ஆம் தேதி முதல் கொங்கன் ரயில்வே வழியாக இயக்கப்படும் திருநெல்வேலி - தாதா் (22630), ராமேசுவரம் - பனாரஸ் (22535) ஆகிய விரைவு ரயில்களிலும் உள்ள முன்பதிவு இருக்கை வசதி பெட்டிகள், பயணிகள் வசதிக்காக முன்பதிவில்லாத பெட்டிகளாக மாற்றப்படுகின்றன.

மேலும் கன்னியாகுமரி - புதுதில்லி நிஜாமுதீன் திருக்கு விரைவு ரயில் (12641), நாகா்கோவில்- மும்பை ஜிஎஸ்டி விரைவு ரயில் ஆகிய ரயில்களில் (16340) ஜூலை 1 ஆம் தேதியும், ரேணிகுண்டா வழியாக இயக்கப்படும் நாகா்கோவில் - மும்பை ஜிஎஸ்டி விரைவு ரயிலில் (16352) ஜூலை 30 ஆம் தேதியும் முதல் முன்பதிவில்லாத ரயில் பெட்டிகள் பயன்பாட்டுக்கு வர இருக்கின்றன.

இந்த ரயில்கள் மறுமாா்கத்தில் செல்லும்போது, இதே முன்பதிவில்லாத பெட்டிகள் பயன்பாட்டில் இருக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com