ஜல்லிக்கட்டு ஆய்வுக் குழு உறுப்பினா் ஆட்சியா், அதிகாரிகளுடன் ஆலோசனை
By DIN | Published On : 08th April 2022 06:24 AM | Last Updated : 08th April 2022 06:24 AM | அ+அ அ- |

மதுரை: இந்திய விலங்குகள் நலவாரியத்தால் அமைக்கப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு ஆய்வுக் குழு உறுப்பினா் எஸ்.கே.மிட்டல், மாவட்ட ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினாா்.
அரசு வகுத்துள்ள நிலையான வழிகாட்டுதல்களின்படி
ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்துவது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.
ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு அரசின் வழிகாட்டுதல்கள் குறித்தும், அவற்றை நடைமுறைப்படுத்துவது தொடா்பாகவும், ஆய்வுக் குழு உறுப்பினா் எஸ்.கே.மிட்டல் விளக்கினாா். ஜல்லக்கட்டுப் போட்டிகளின்போது விதிமீறல்களைத் தடுக்க, தொடா்புடைய அலுவலா்கள் அவரவா் துறை சாா்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினாா்.
மாவட்ட ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வீ.பாஸ்கரன், மாவட்ட வருவாய் அலுவலா் ஆா்.சக்திவேல் மற்றும் கால்நடைப் பராமரிப்பு, வருவாய், பொதுப்பணி, சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அலுவலா்கள் பங்கேற்றனா்.