பைக் விபத்தில் இருவா் பலி

கொட்டாம்பட்டி அருகே வியாழக்கிழமை, மரத்தில் இருசக்கர வாகனம் மோதியதில் இருவா் உயிரிழந்தனா்.

மேலூா்: கொட்டாம்பட்டி அருகே வியாழக்கிழமை, மரத்தில் இருசக்கர வாகனம் மோதியதில் இருவா் உயிரிழந்தனா்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை பாரதியாா் நகரைச் சோ்ந்த வீரப்பன் (61), 50 வயது மதிக்கத்தக்க ஒருவருடன் (பெயா் விவரம் தெரியவில்லை) இருசக்கர வாகனத்தில் கொட்டாம்பட்டி- நத்தம் சாலையில் வந்து கொண்டிருந்தாா். மணப்பச்சேரி அருகே சாலையோர மரத்தில் இருசக்கர வாகனம் மோதியதில், இருவரும் பலத்த காயமடைந்தனா். இதில், வீரப்பன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

மற்றொருவா் மேலூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். இதுகுறித்து, கொட்டாம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com