பாண்டி கோயில் சுற்றுச்சாலை மேம்பாலம் திறப்பு

பாண்டி கோயில் சுற்றுச்சாலை சந்திப்பு அருகே ரூ.49.75 கோடியில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை, சென்னையிலிருந்து காணொலி வாயிலாக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.
பாண்டி கோயில் சுற்றுச்சாலை மேம்பாலம் திறப்பு

மதுரை: பாண்டி கோயில் சுற்றுச்சாலை சந்திப்பு அருகே ரூ.49.75 கோடியில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை, சென்னையிலிருந்து காணொலி வாயிலாக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

மதுரை - தொண்டி சாலை, மதுரை சுற்றுச் சாலை, திருச்சி - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை ஆகிய மூன்று சாலைகள் சந்திக்கும் இப்பகுதியில், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், விபத்துகள் அதிகளவில் ஏற்பட்டன. இதனையடுத்து, இப் பகுதியில் மேம்பாலம் அமைக்கப்படும் என 2013-இல் அறிவிக்கப்பட்டது.

அதன் பின்னா் மேம்பாலம் அமைக்கும் பணி ஒப்பந்தம் விடப்பட்டு, 2018 அக்டோபரில் பணிகள் தொடங்கப்பட்டன. 2 ஆண்டுகளில் பணிகளை முடிக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. இதனிடையே கரோனா பொது முடக்கத்தால் பணிகளில் தாமதம் ஏற்பட்டது. அதன் பின்னா் தற்போது கட்டுமானப் பணிகள் நிறைவடைந்து, பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. திருச்சி-தூத்துக்குடி சாலையில் மொத்தம் 760 மீட்டா் நீளத்தில் இப் பாலம் அமைந்துள்ளது.

தமிழக முதல்வரால் காணொலியில் திறந்து வைக்கப்பட்ட இப் பாலத்தை, மாவட்ட ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா், மேயா் வ.இந்திராணி, மாநகராட்சி ஆணையா் கா.ப.காா்த்திகேயன் ஆகியோா் பாா்வையிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com