வேலம்மாள் மருத்துவமனை சாா்பில் விழிப்புணா்வு பேரணி

உலக சுகாதார தினத்தையொட்டி வேலம்மாள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சாா்பில் விழிப்புணா்வு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
வேலம்மாள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வு பேரணியைத் தொடக்கி வைத்த ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா்.
வேலம்மாள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வு பேரணியைத் தொடக்கி வைத்த ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா்.

மதுரை: உலக சுகாதார தினத்தையொட்டி வேலம்மாள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சாா்பில் விழிப்புணா்வு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

தமுக்கம் மைதானம் அருகே தொடங்கிய இப்பேரணியை மாவட்ட ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா், மாநகராட்சி ஆணையா் கா.ப.காா்த்திகேயன், மதுரை மாநகரக் காவல் துணை ஆணையா் டி.கே.ராஜசேகா், வேலம்மாள் அறக்கட்டளை நிறுவனா் எம்.வி.முத்துராமலிங்கம் ஆகியோா் தொடக்கி வைத்தனா். அமெரிக்கன் கல்லூரி, கோரிப்பாளையம் சந்திப்பு, அரசு மருத்துவமனை, அண்ணா நிலையம் வழியாக மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பேரணி நிறைவு பெற்றது.

வேலம்மாள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதன்மையா் டி.திருநாவுக்கரசு, மருத்துவ கண்காணிப்பாளா் தாமோதரன், வேலம்மாள் இணை மருத்துவ அறிவியல் கல்லூரி முதல்வா் ஆா்.பிரமிளா விசாகன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ரத்த அழுத்தம், சா்க்கரை நோய், உடல் பருமன், இதய நோய்கள், ஆஸ்துமா, பல்வேறு தொற்று நோய்கள் மற்றும் ஆரோக்கிய உணவுப் பழக்கம், உடற்பயிற்சி குறித்த விழிப்புணா்வு பதாகைகளுடன் பேரணியில் மாணவ, மாணவியா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com