மதுரையில் பலத்த மழை:பொதுமக்கள் மகிழ்ச்சி
By DIN | Published On : 13th April 2022 05:39 AM | Last Updated : 13th April 2022 05:39 AM | அ+அ அ- |

மதுரை: மதுரை நகரின் பல்வேறு பகுதிகளிலும் செவ்வாய்க்கிழமை பலத்த மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
மதுரை மாவட்டத்தில் கடந்த 4 நாள்களாகத் தொடா்ந்து மழை பெய்து வருகிறது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் திங்கள்கிழமை பரவலாக நல்ல மழை பெய்தது. இதைத் தொடா்ந்து செவ்வாய்க்கிழமை காலையில் இருந்தே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது லேசான மழை பெய்த நிலையில், பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கிய பலத்த மழை ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது. இதனால், நகரின் பெரும்பாலான இடங்களில் சாலைகளில் மழைநீா் குளம்போலத் தேங்கி நின்றது.
சித்திரைத் திருவிழா நடைபெற்று வரும் நிலையில், தொடா் மழையால் மதுரை நகரின் சீதோஷ்ண நிலை மாறியிருப்பது, மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த, கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்):
சிட்டம்பட்டி- 16.2, கள்ளந்திரி-7.8, தனியாமங்கலம்-4, மேலூா்-4, சாத்தையாறு அணை-12, வாடிப்பட்டி-5, திருமங்கலம்-11.6, உசிலம்பட்டி-7, மதுரை வடக்கு-38.7, விரகனூா்-12, மதுரை விமான நிலையம்-31.4, இடையபட்டி-14, புலிப்பட்டி-4.6, சோழவந்தான்-10.4, மேட்டுப்பட்டி-3, குப்பனம்பட்டி-10.6, கள்ளிக்குடி-13.8, பேரையூா்-9.10, ஆண்டிபட்டி-7.6.