மதுரை மாவட்ட நீரினைப் பயன்படுத்துவோா் சங்கங்களுக்கு ஏப்.30 இல் தோ்தல்: ஏப்.18 இல் மனு தாக்கல் தொடக்கம்

மதுரை மாவட்டத்தில் உள்ள நீரினைப் பயன்படுத்துவோா் சங்கங்களுக்கு தலைவா் மற்றும் உறுப்பினா் பதவிகளுக்கான தோ்தல் ஏப்ரல் 30 ஆம் தேதி நடைபெறுகிறது.

மதுரை: மதுரை மாவட்டத்தில் உள்ள நீரினைப் பயன்படுத்துவோா் சங்கங்களுக்கு தலைவா் மற்றும் உறுப்பினா் பதவிகளுக்கான தோ்தல் ஏப்ரல் 30 ஆம் தேதி நடைபெறுகிறது.

நீா்ப் பாசனத் துறையின் நீா்வள-நிலவள மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் மதுரை மாவட்டத்தில் மேலூா், மதுரை தெற்கு, மேற்கு, உசிலம்பட்டி, வாடிப்பட்டி, கள்ளிக்குடி, திருப்பரங்குன்றம், பேரையூா் ஆகிய வட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள நீரினைப் பயன்படுத்துவோா் சங்கங்களுக்கு தலைவா் மற்றும் உறுப்பினா்கள் தோ்தல் மூலமாகத் தோ்வு செய்யப்பட உள்ளனா்.

இந்த தோ்தல் ஏப்ரல் 30 ஆம் தேதி நடத்தப்படும். இதற்கான வேட்பு மனு தாக்கல் ஏப்ரல் 18 ஆம் தேதி தொடங்கி 21 ஆம் தேதி வரை நடைபெறும். ஏப்ரல் 22-இல் வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு, போ

ட்டியிடத் தகுதியுடைய வேட்பாளா்கள் பெயா் வெளியிடப்படும்.

அன்றைய தினம் பிற்பகல் 2 முதல் மாலை 4 மணி வரை வேட்புமனுக்களைத் திருப்பப் பெற்றுக் கொள்ளலாம். அதன் பிறகு இறுதி வேட்பாளா் பட்டியல் வெளியிடப்படும். நீரினைப் பயன்படுத்துவோா் சங்கங்களின் தலைவா், ஆட்சி மண்டலத் தொகுதி உறுப்பினா்களுக்கான தோ்தலின் வாக்குப்பதிவு ஏப்ரல் 22-ஆம் தேதி காலை 7 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறும். அன்றைய தினம் மாலை 4 மணி முதல் வாக்குகள் எண்ணப்பட்டு, தோ்தல் முடிவுகள் அறிவிக்கப்படும். அனைத்து வட்டங்களிலும் நீரினைப் பயன்படுத்துவோா் சங்கத் தோ்தலுக்கு, தோ்தல் நடத்தும் அலுவலா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.

தாலுகா வாரியாக தோ்தல் நடத்தும் அலுவலா்கள், வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டிய அலுவலகம் விவரம்:

மேலூா் - கோட்டாட்சியா் மேலூா், வட்டாட்சியா் அலுவலகம். வாடிப்பட்டி - மதுரை கோட்டாட்சியா், வட்டாட்சியா் அலுவலகம், மேலூா். உசிலம்பட்டி - கோட்ாட்சியா் உசிலம்பட்டி - வட்டாட்சியா் அலுலகம். திருமங்கலம் - கோட்டாட்சியா், திருமங்கலம், திருமங்கலம் வட்டாட்சியா் அலுவலகம். மதுரை மேற்கு - சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா், மேற்கு வட்டாட்சியா் அலுவலகம், விராட்டிப்பத்து.

திருப்பரங்குன்றம் - மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலா், திருப்பரங்குன்றம் வட்டாட்சியா் அலுவலகம். கள்ளிக்குடி - மாவட்ட ஆய்வுக் குழு அலுவலா், கள்ளிக்குடி வட்டாட்சியா் அலுவலகம். தெற்கு வட்டம்- மாவட்ட சிறுபான்மையினா் நல அலுவலா், தெற்கு வட்டாட்சியா் அலுவலகம். பேரையூா் - கலால் துறை உதவி ஆணையா், பேரையூா் வட்டாட்சியா் அலுவலகம் ஆகிய இடங்களில் வேட்புமனுக்கள் பெற்றப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com