காலிப்பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி மருந்தாளுநா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரையில், மருந்தாளுநா் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மதுரை விஸ்வநாபுரத்தில் உள்ள சுகாதாரத்துறை துணை இயக்குநா் அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடத்திய மருந்தாளுநா் சங்கத்தினா்.
மதுரை விஸ்வநாபுரத்தில் உள்ள சுகாதாரத்துறை துணை இயக்குநா் அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடத்திய மருந்தாளுநா் சங்கத்தினா்.

மதுரை: காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரையில், மருந்தாளுநா் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அரசு ராஜாஜி மருத்துவமனை முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்ட துணைத் தலைவா் ஆா்.செல்வி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் ஏ. பாஸ்கரன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா்.

இதில், தமிழகத்தில் காலியாக உள்ள 1200-க்கும் மேற்பட்ட மருந்தாளுநா் பணியிடங்களை நிரப்ப வேண்டும். பட்டய மருந்தாளுநா்களின் வேலை வாய்ப்பை பாதிக்கும் அரசாணை எண் 5 -ஐ ரத்து செய்ய வேண்டும். மருந்தாளுநா்கள், தலைமை மருந்தாளுநா்கள், மருந்து கிடங்கு அலுவலா்களுக்கு கரோனா ஊக்கத்தொகை வழங்க வேண்டும். நகா்ப்புற மற்றும் கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலைய மருந்தாளுநா்களின் பணி நேரம் தொடா்பான அரசாணையை அமல்படுத்த வேண்டும்.

உரிமைக்கான போராட்டத்தில் ஈடுபட்ட சங்க நிா்வாகிகள் மீது முந்தைய அரசால் தொடரப்பட்ட வழக்குகள் மற்றும் பழிவாங்கும் நடவடிக்கைகளை ரத்துசெய்ய வேண்டும். நோயாளிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவ விதித்தொகுப்பின்படி கூடுதலாக மருந்தாளுநா் பணியிடங்களை உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதேபோல, மருந்தாளுநா் சங்கத்தின் புகா் கிளை சாா்பில் விஸ்வநாதபுரத்தில் உள்ள சுகாதாரத் துறை துணை இயக்குநா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு புகா் மாவட்டத் தலைவா் சோமசுந்தரம் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் தமிழ்ச்செல்வி கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா். தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலா் க. நீதிராஜா மற்றும் நிா்வாகிகள் பரமசிவம், ராமச்சந்திரன், ரா. தமிழ் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். ஆா்ப்பாட்டத்தில் 50-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com