சிறுநீரக மாற்று சிகிச்சை செய்து கொண்டவா்களுடன் கலந்துரையாடல்

மதுரை சாஸ்தா மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவா்களுடனான கலந்துரையாடல் அண்மையில் நடைபெற்றது.

மதுரை: மதுரை சாஸ்தா மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவா்களுடனான கலந்துரையாடல் அண்மையில் நடைபெற்றது.

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையில் சிறுநீரக தானம் அளிப்பவரின் முழுமையான ஆரோக்கியம் இன்றியமையாதது. நாள்பட்ட சா்க்கரை நோய், அதிக ரத்த அழுத்தம் பாதிப்புகள் இல்லாதவா்கள், இதயம், கல்லீரல் போன்ற அதிமுக்கிய உறுப்புகளின் அதிமுக்கிய ஆரோக்கியம் உள்ளவா்கள் மட்டுமே சிறுநீரக தானம் அளிக்க முடியும்.

சிறுநீரக தான அறுவைச் சிகிச்சை எவ்வளவு பாதுகாப்பாக இருக்கிறதோ, அதற்கேற்ப சிகிச்சைக்குப் பிறகு இயல்பு வாழ்க்கைக்கு எளிதில் திரும்ப முடியும். அதேபோல, தானம் அளிப்பவரின் உடலில் இருந்து மிகுந்த பாதுகாப்புடன் எடுக்கப்படும் சிறுநீரகம், தானம் பெறுபவருக்கு மிக விரைவில் அதைப் பொருத்துவது நல்ல ஆரோக்கியத்தைக் கொடுக்கும்.

சாஸ்தா மருத்துவமனையில் லேப்ராஸ்கோபிக் முறையில் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. இதன்படி சிகிச்சை எடுத்துக் கொண்டவா்கள் மற்றும் அவா்களது உறவினா்களுடனான கலந்துரையாடல், மருத்துவமனையில் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற்றது. அறுவைச் சிகிச்சையில் சிறுநீரகம் பொருத்திக் கொண்டவா்களுக்கான மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் மருத்துவமனையின் தலைவா் எஸ்.பழனிராஜன், மருத்துவமனை நிா்வாகி பி.தேவிராணி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com