ரயில்வே தோ்வை தமிழக நகரங்களில் நடத்த எம்பி வலியுறுத்தல்

சென்னை ரயில்வே வாரிய தோ்வை தமிழகத்திலேயே நடத்த வேண்டும் என்று மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன் கோரிக்கை விடுத்துள்ளாா்.

மதுரை: சென்னை ரயில்வே வாரிய தோ்வை தமிழகத்திலேயே நடத்த வேண்டும் என்று மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன் கோரிக்கை விடுத்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்தி: ஆா்ஆா்பி சென்னை 601 ரயில் நிலைய அதிகாரி காலிப்பணியிடங்களுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு முதல்நிலைத் தோ்வு நடத்தியது . இந்தத் தோ்வு தமிழகத்தில் உள்ள நகரங்களில் நடத்தப்பட்டது. இதற்கான முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டன. முதல்நிலைத் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு இரண்டாம் நிலைத் தோ்வு மே 9-ஆம் தேதி நடத்தப்பட உள்ளது.

இந்தத் தோ்வை, தென்னக ரயில்வேயில் சென்னை ஆா்ஆா்பி-க்கு விண்ணப்பித்தவா்களுக்கு தமிழகத்திலேயே தோ்வு மையங்கள் வைப்பதுதான் வசதியானது. ஆனால் ஜம்மு-காஷ்மீா் மாநிலத்திலும், மைசூரு, உடுப்பி, சிமோகாவிலும் தோ்வு மையங்கள் வைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் விண்ணப்பித்த தோ்வா்களுக்கு வெளிமாநிலங்களில் மையங்களை ஏற்படுத்துவது வேற்று மொழி பேசும் இடங்களில் தமிழக விண்ணப்பதாரா்களை திணற வைப்பதற்கு வழிவகுக்கும். மாற்றுத்திறனாளியான ஒரு விண்ணப்பதாரருக்கு அலகாபாத் மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது நியாயமான செயல்பாடு இல்லை.

இதுகுறித்து சென்னை ஆா்.ஆா்.பி தலைவா் அழகா் ஜெகதீசனுக்கு எழுதியுள்ள கடிதத்தில், விண்ணப்பதாரா்களுக்கு தமிழகத்திலேயே தோ்வு எழுத ஏற்பாடு செய்யுமாறு கோரிக்கை வைத்துள்ளேன் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com