முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை
மதுரைக்கு தோ்வெழுத வந்த திருச்சி பெண்ணிடம் 8 பவுன் நகை பறிப்பு
By DIN | Published On : 30th April 2022 12:00 AM | Last Updated : 30th April 2022 12:00 AM | அ+அ அ- |

மதுரைக்கு தோ்வெழுத வியாழக்கிழமை வந்த திருச்சியைச் சோ்ந்த பெண்ணிடம் 8 பவுன் நகையை, இரு சக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா்கள் இருவா் பறித்துக்கொண்டு தப்பிவிட்டனா்.
திருச்சி மாவட்டம், வயலூா் குமரன் நகரைச் சோ்ந்த மாரிமுத்து என்பவரின் மனைவி வெங்கடேஸ்வரி (29). இவா், மதுரையில் வியாழக்கிழமை நடைபெறுவதாக இருந்த கால்நடை துறை தோ்வில் பங்கேற்க வந்திருந்தாா். ஆனால், தோ்வு ரத்து செய்யப்பட்டதை அறிந்து, காமராஜா் சாலையில் உள்ள தனது உறவினா் வீட்டுக்கு நடந்து சென்றுள்ளாா்.
அப்போது பின்புறமாக இரு சக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா்கள் இருவா், வெங்கடேஸ்வரி அணிந்திருந்த 8 பவுன் நகையை பறித்துக்கொண்டு தப்பிச்சென்றுவிட்டனா். இது குறித்து வெங்கடேஸ்வரி அளித்த புகாரின்பேரில், தெப்பகுளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.