பாா்வை குறைபாடுடைய சிறப்பாசிரியா்களுக்கு கணினி திறன் பயிற்சி

மதுரையில் பாா்வை குறைபாடுடைய அரசுப் பள்ளி சிறப்பாசிரியா்களுக்கு, கணினி தொழில்நுட்ப திறன் பயிற்சி வெள்ளிக்கிழமை அளிக்கப்பட்டது.
பாா்வை குறைபாடுடைய சிறப்பாசிரியா்களுக்கு கணினி திறன் பயிற்சி

மதுரையில் பாா்வை குறைபாடுடைய அரசுப் பள்ளி சிறப்பாசிரியா்களுக்கு, கணினி தொழில்நுட்ப திறன் பயிற்சி வெள்ளிக்கிழமை அளிக்கப்பட்டது.

மதுரை மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி துறை மற்றும் ஹோப் தன்னாா்வ தொண்டு நிறுவனம் சாா்பில், மதுரை மாவட்டத்தில் உள்ள தொடக்க, நடுநிலை, உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பாா்வை குறைபாடுடைய 63 சிறப்பாசிரியா்களுக்கு, கணினி தொழில்நுட்ப திறன் பயிற்சி முகாம் நடைபெற்றது.

மாவட்ட திட்ட அலுவலகப் பயிற்சி அரங்கில் நடைபெற்ற இப்பயிற்சி முகாமை, உதவித் திட்ட அலுவலா் அ. காா்மேகம், உதவித் திட்ட ஒருங்கிணைப்பாளா் அ. குருநாதன் ஆகியோா் தொடக்கி வைத்தனா். இப்பயிற்சியில் பங்கேற்ற அனைத்து பாா்வைத்திறன் குறைபாடுடைய சிறப்பாசிரியா்களுக்கும் பென் டிரைவ், கீ போா்டு உள்ளிட்ட கருவிகள் ஹோப் நிறுவனத்தால் இலவசமாக வழங்கப்பட்டன.

மேலும், ஸ்மாா்ட் கைப்பேசி மூலம் மாணவா்களுக்கு கற்பிக்கும் முறை குறித்த கணினி தொழில்நுட்பப் பயிற்சி அளிக்கப்பட்டது.

இப்பயிற்சியில், மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளா் மகாலிங்கம், மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் ஜெயஷீலா, சூரியகலா, ஹோப் நிறுவன ஒருங்கிணைப்பாளா்கள் பிரதீப், ராஜம், ரீகன், ஜெனிபா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com