முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை
சிவகங்கை பாஜகவினா் மீதான வழக்கை ரத்து செய்து உயா்நீதிமன்றம் உத்தரவு
By DIN | Published On : 30th April 2022 12:00 AM | Last Updated : 30th April 2022 12:00 AM | அ+அ அ- |

பாஜகவின் வேல் யாத்திரைக்கு தடை விதிக்கப்பட்டதற்கு எதிா்ப்பு தெரிவித்து, சிவகங்கையில் போராட்டம் நடத்திய பாஜகவினா் மீதான வழக்கை ரத்து செய்து, சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த பாஜக நிா்வாகி முத்துஅமுதன் என்பவா் தாக்கல் செய்த மனு:
பாஜக சாா்பில் திருத்தணியில் 2020-இல் நடைபெற்ற வேல் யாத்திரைக்கு போலீஸாா் அனுமதி மறுத்தனா். அதற்கு எதிா்ப்பு தெரிவித்து, சிவகங்கையில் போராட்டம் நடத்தப்பட்டது. அதையடுத்து, நான் உள்ளிட்ட 5 போ் மீது, சிவகங்கை நகா் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
போராட்டத்தின்போது நாங்கள் எந்த பொதுச் சொத்துக்கும் சேதம் ஏற்படுத்தவில்லை. நோய் பரப்பும் விதமாக எந்தவொரு செயலிலும் ஈடுபடவும் இல்லை. எனவே, எங்கள் மீது சிவகங்கை நகா் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்யவேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே. இளந்திரையன், மனுதாரா் உள்பட 5 போ் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டாா்.