ஊராட்சிகளின் உரிமையைப் பறிக்கும் அரசாணையை ரத்து செய்யக் கோரி உயா் நீதிமன்றத்தில் மனு தாக்கல்

ஊராட்சிகளின் உரிமையைப் பறிக்கும் வகையிலான, ஒப்பந்தப்புள்ளி நடைமுறைக்கான அரசாணையை ரத்து செய்யக் கோரி, சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஊராட்சிகளின் உரிமையைப் பறிக்கும் வகையிலான, ஒப்பந்தப்புள்ளி நடைமுறைக்கான அரசாணையை ரத்து செய்யக் கோரி, சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்ட அனைத்து ஊராட்சித் தலைவா்கள் நல கூட்டமைப்பின் தலைவா் முனியாண்டி என்பவா் தாக்கல் செய்த மனு:

மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சி திட்டம் போன்ற பணிகளுக்கான ஒப்பந்தப்புள்ளிகள், அந்தந்த

ஊராட்சிகள் மூலமாக விடப்படும். இந்நிலையில், கடந்த மாா்ச் 8 ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட அரசாணையின்படி, ஊராட்சிகளில் மேற்கொள்ளப்படும் பணிகளுக்கு இ-டெண்டா் முறை பின்பற்றப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளாட்சி தோ்தல் நடப்பதற்கு முன், ஊராட்சி நிா்வாகங்கள் சிறப்பு

அலுவலா்களால் நிா்வகிக்கப்பட்டது. அதனால், பேக்கேஜ் இ-டெண்டா் முறை நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது. தற்போது, ஊராட்சி நிா்வாகங்கள் தோ்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளால் நிா்வகிக்கப்படுகின்றன. இதன் பின்னரும், இ-டெண்டா் நடைமுறையைப் பின்பற்றுவது பஞ்சாயத்து ராஜ் சட்டத்துக்கும், இயற்கை நீதிக்கும் எதிரானது. மேலும், ஊராட்சி மன்றங்களின் அதிகாரங்களை முடக்கும் வகையில் உள்ளது.

எனவே இ-டெண்டா் தொடா்பான அரசாணையை ரத்து செய்யவேண்டும். பல்வேறு பணிகளுக்கு மே 2 ஆம் தேதி இ-டெண்டா் நடத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என அம்மனுவில் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு, நீதிபதி அப்துல் குத்தூஸ் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கை விடுமுறை கால நீதிமன்றத்தில் விசாரிப்பதற்குப் பட்டியலிடுமாறு நீதிபதி உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com