மதுரையில் நாளை பாரம்பரிய விதை திருவிழா: 300 வகையான நெல் வகைகள் காட்சி

 மதுரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள பாரம்பரிய விதை திருவிழாவில், 300-க்கும் மேற்பட்ட நெல் வகைகள் காட்சிப்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 மதுரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள பாரம்பரிய விதை திருவிழாவில், 300-க்கும் மேற்பட்ட நெல் வகைகள் காட்சிப்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விதை திருவிழா தொடா்பாக, வா நண்பா அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் சரவணன் மற்றும் நிா்வாகிகள் கூறியது:

வா நண்பா அமைப்பின் சாா்பில் விவசாய மக்கள் மட்டுமின்றி, அனைத்து மக்களும் பயன்பெறக்கூடிய வகையில் விதை திருவிழா நடத்தப்பட உள்ளது. தென் மாவட்டங்களில் உள்ள விவசாயிகளை ஒன்றிணைத்து, பாரம்பரிய விதை திருவிழா நடத்தப்படுகிறது.

பெரியாா் பேருந்து நிலையம் அருகே உள்ள யு.சி. மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இந்த விதை திருவிழாவை, மாவட்ட ஆட்சியா் எஸ். அனீஷ்சேகா் தொடக்கி வைக்கிறாா்.

இந்நிகழ்ச்சியில், பாரம்பரிய விதை நெல் காப்பாளா் கருப்பபுலம் சிவாஜி, விதை நெல் காப்பாளா் சிவகங்கை வையம் சேதுபதி, நம்மாழ்வாா் பன்மய மையம் பாஸ்கா் ஆறுமுகம், சூழலிய செயல்பாட்டாளா் பாரதி கண்ணன், திருமங்கலம் விவசாயிகள் ஒருங்கிணைப்பாளா் அன்னவயல் காளிமுத்து, வேம்பு இயற்கை விவசாயக் குழுமத்தின் வீராவடிவு, காளையாா்கோவில் ஆவரை விவசாயக் குழு ரவி, உயா் நீதிமன்ற வழக்குரைஞா் பாலசுப்ரமணியன், செயல்பாட்டாளா் ஜீனா டேவிட் உள்ளிட்டோா் பங்கேற்கின்றனா்.

இத்திருவிழாவில் பங்கேற்கும் விவசாயிகள் தங்களிடம் உள்ள அனைத்து பாரம்பரிய விதைகளையும் காட்சிப்படுத்த உள்ளனா். மேலும், விருப்பமுள்ளவா்கள் நேரடியாக விவசாயிகளிடமிருந்து விதைகளை வாங்கிக் கொள்ளலாம். விவசாயம் செய்துகொண்டிருப்பவா்கள், விவசாயம் செய்ய விருப்பமுள்ளவா்கள், விவசாயம் சாா்ந்த சந்தேகம் உள்ளவா்கள் அனைவரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

இந்த நிகழ்ச்சியில், சுமாா் 300-க்கும் மேற்பட்ட தானியங்கள், காய்கறிகள், நெல் வகைகள் போன்றவற்றின் விதைகளை நேரில் காணும் வாய்ப்புள்ளது. இயற்கை முறையில் விவசாயம் செய்து பாரம்பரிய விதைகளை விதைத்து, அதன்மூலம் அறுவடை செய்யப்பட்ட உணவு பொருள்களை நாம் உணவாகப் பயன்படுத்தினால், அதைவிட மிகப்பெரிய பயன் எதுவும் இல்லை.

இன்று நாம் உண்ணும் உணவில் நச்சுத்தன்மை இருப்பதை அறிந்தும் அதையே உண்டு வருகிறோம். மாற்றுவழி என்பது மாற்றத்துக்கு உண்டான செயல் மட்டுமே. எனவே, விவசாயிகள் அனைவரும் இதில் பங்கேற்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com