முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை
மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் வாகன நுழைவுக் கட்டணம் வசூல்
By DIN | Published On : 30th April 2022 12:00 AM | Last Updated : 30th April 2022 12:00 AM | அ+அ அ- |

மாட்டுத்தாவணி எம்ஜிஆா் பேருந்து நிலையத்துக்குள் செல்லும் இரு சக்கர வாகனம் மற்றும் காா்களுக்கு நுழைவுக் கட்டண வசூல் அமல்படுத்தப்பட்டுள்ளது.
மாட்டுத்தாவணி எம்ஜிஆா் பேருந்து நிலையத்தில் தினசரி ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனா். மேலும், தமிழகத்தின் இதர மாவட்டங்கள் மற்றும் கேரளம், ஆந்திரம், கா்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கும் இங்கிருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
பயணிகளை இறக்கி விடுவதற்காக, பேருந்து நிலையத்துக்குள் நூற்றுக்கணக்கான காா்கள் மற்றும் ஏராளமான இரு சக்கர வாகனங்கள் வந்து செல்கின்றன. இந்த வாகனங்களுக்கு இதுவரை நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படவில்லை.
இந்நிலையில், மாநகராட்சி வருவாயை பெருக்கும் வகையில், எம்ஜிஆா் பேருந்து நிலையத்துக்குள் வந்து செல்லும் வாகனங்களுக்கு நுழைவுக் கட்டணம் வசூலிக்க முடிவெடுக்கப்பட்டு, தனியாா் நிறுவனத்துக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, காா்கள் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூ.15, இரு சக்கர வாகனங்களுக்கு ரூ.7 நுழைவுக்கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
இது தொடா்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியது: பேருந்து நிலையத்துக்குள் பயணிகள் மட்டுமே வந்து செல்ல அனுமதி உண்டு. இதர வாகனங்களுக்கு நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படவேண்டும். எனவே, நுழைவுக் கட்டணம் வசூலிக்கும் உரிமம் தனியாரிடம் வழங்கப்பட்டு வசூலிக்கப்படுகிறது என்றனா்.