தெற்கு ரயில்வே காற்றாலைகளில் 9.15 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி

தெற்கு ரயில்வே சாா்பில் அமைக்கப்பட்டுள்ள காற்றாலைகளில் கடந்த மூன்றரை ஆண்டுகளில் 9.15 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

தெற்கு ரயில்வே சாா்பில் அமைக்கப்பட்டுள்ள காற்றாலைகளில் கடந்த மூன்றரை ஆண்டுகளில் 9.15 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

தெற்கு ரயில்வே மதுரை கோட்ட நிா்வாகம் பசுமை மின்சார பயன்பாட்டுக்காக தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே 5 காற்றாலை அமைப்புக்களை நிறுவியுள்ளது. 2019 ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்ட இந்த காற்றாலைகள் ஒவ்வொன்றும் 2.1 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் திறன் உள்ளவை.

கடந்த 2021 - 22 ஆம் நிதி ஆண்டில் இந்த காற்றாலைகள் 2.5 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூ.14.54 கோடி மின்சார செலவு குறைந்துள்ளது. கடந்த மூன்றரை ஆண்டுகளாக ஜூலை மாதம் வரை மொத்தம் 9.15 கோடி யூனிட்டுகள் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூ.48.54 கோடி சேமிக்கப்பட்டுள்ளது.

நிகழ் ஆண்டில் ஜூலை 13 ஆம் தேதி, அதிகபட்சமாக 2 லட்சத்து 61 ஆயிரத்து 412 கிலோவாட் யூனிட் மின்சாரம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த காற்றாலை மின்சாரம் மூலமாக ரயில்கள் இயக்க கடந்த ஆண்டில்

1.86 சதவீத மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது.

மதுரை கோட்ட ரயில்வே அலுவலகத்தில் சூரியசக்தி மூலம் 11 கிலோ வோல்ட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு அலுவலக பயன்பாட்டிற்கு

உபயோகப்படுத்தப்படுகிறது. மதுரை ரயில் நிலையத்தில் நடைமேடை மேற்கூரைகளில் 100 கிலோ வோல்ட் சூரிய சக்தி மின்சாரம் தயாரிக்கும் போட்டோ வோல்டைக் தகடுகள் அமைக்கப்பட்டு சூரிய சக்தி மின்சாரம் தயாரிக்கப்பட்டு வருகிறது.

தெற்கு ரயில்வே மதுரைக் கோட்ட அலுவலகம் இத் தகவலைத் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com