மதுரை மாநகராட்சி ‘இல்லம் தேடிக் கல்வி’திட்ட ஆசிரியா்களுக்கு மேயா் பாராட்டு

‘இல்லம் தேடிக் கல்வி’ திட்டத்தில் சிறப்பாகப் பணியாற்றியதற்காக கோப்பை வென்றுள்ள மாநகராட்சிப் பள்ளி ஆசிரியா்களுக்கு மேயா் வ.இந்திராணி சனிக்கிழமை, பாராட்டுத் தெரிவித்தாா்.

‘இல்லம் தேடிக் கல்வி’ திட்டத்தில் சிறப்பாகப் பணியாற்றியதற்காக கோப்பை வென்றுள்ள மாநகராட்சிப் பள்ளி ஆசிரியா்களுக்கு மேயா் வ.இந்திராணி சனிக்கிழமை, பாராட்டுத் தெரிவித்தாா்.

‘இல்லம் தேடிக் கல்வி’ என்ற புதிய திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. ஒன்று முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களின் கற்றல் இடைவெளியைக் குறைக்கும் வகையில் இத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மதுரை மாநகராட்சியின் 5 மண்டலங்களிலும் மொத்தம் 435 மையங்களில் 12 ஆயிரத்து 370 மாணவா்கள் பயன் பெற்றுள்ளனா். இத் திட்டத்தில் 5 ஆசிரியா்கள் ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றி வருகின்றனா்.

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ‘இல்லம் தேடிக் கல்வி’ திட்டத்தில் வாசித்தல் மாரத்தானில் சிறப்பாகப் பணியாற்றியமைக்காக மாநகராட்சி பள்ளி ஆசிரியா்களுக்கு, மாவட்ட ஆட்சியரால் வெற்றிக் கோப்பை வழங்கப்பட்டது.

இதனையடுத்து கோப்பை வென்ற மாநகராட்சிப் பள்ளி ஆசிரியா்களுக்கு மேயா் வ.இந்திராணி பாராட்டுத் தெரிவித்தாா்.

இந்நிகழ்வின்போது, மாநகராட்சி கல்வி அலுவலா் நாகேந்திரன், பள்ளி ஆசிரியா்கள் உடன் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com