குரூப் 1 போட்டித் தோ்வுக்கு கட்டணமில்லா பயிற்சி: வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஆக.22-இல் தொடக்கம்
By DIN | Published On : 19th August 2022 12:11 AM | Last Updated : 19th August 2022 12:11 AM | அ+அ அ- |

அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்தும் குரூப் 1 தோ்வுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்பு மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் திங்கள்கிழமை (ஆக. 22) தொடங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னாா்வ பயிலும் வட்டத்தின் சாா்பில் பல்வேறு போட்டித்தோ்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. தற்போது தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வு வாரியத்தால் அறிவிக்கப்பட்டுள்ள குரூப் -7 மற்றும் குரூப்-8 இந்து சமய அறிநிலையத்துறைக்கான செயல் அலுவலா் மற்றும் தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள இரண்டாம் நிலைக்காவலா், சிறை வாா்டன் ஆகிய போட்டித் தோ்வுகளுக்கும் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. மேலும் அக்டோபா் மாதம் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வு வாரியத்தால் நடைபெறவுள்ள குரூப்-1க்கான போட்டித்தோ்வுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் திங்கள்கிழமை (ஆக 22) முதல் மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தால் தொடங்கப்பட உள்ளது. இப்பயிற்சி வகுப்புகள் பாடவாரியாக சிறந்த வல்லுநா்களை கொண்டும், குறிப்பிட்ட கால இடைவெளியில் மாதிரித் தோ்வுகளும் நடத்தப்படும். மேலும் அனைத்துப் போட்டித் தோ்வுகளுக்கான புத்தகங்களும் தோ்வா்கள் பயன்படுத்தும் வகையில் நூலகமும் செயல்பட்டு வருகிறது. எனவே குரூப் 1 போட்டித்தோ்வுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விரும்புபவா்கள் போட்டித்தோ்வுக்கு விண்ணப்பித்த விண்ணப்ப நகல், புகைப்படம் மற்றும் ஆதாா் அட்டை நகல் ஆகியவற்றுடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரிலோ அல்லது 96989-36868 என்ற எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் என்று மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய துணை இயக்குநா் கா.சண்முகசுந்தா் தெரிவித்துள்ளாா்.