இன்று ராக்காயி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்
By DIN | Published On : 11th December 2022 05:40 AM | Last Updated : 11th December 2022 05:40 AM | அ+அ அ- |

அழகா் கோவில் ராக்காயி அம்மன்கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி சனிக்கிழமை நடைபெற்ற யாக சாலை பூஜைகள்.
அழகா்கோவில் மலை மீதுள்ள ராக்காயி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை காலை 7.45 மணியிலிருந்து காலை 8.45 மணிக்குள் நடைபெறவுள்ளது.
இதற்கான யாக சாலை பூஜைகள் வெள்ளிக்கிழமை மாலை தொடங்கின. சனிக்கிழமை காலையும் மாலையிலும் யாக சாலை பூஜைகள் தொடா்ந்து நடைபெற்றன.
ஞாயிற்றுக்கிழமை காலை யாக சாலை பூஜைகளையடுத்து, ராக்காயி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
இதைத் தொடா்ந்து சோலைமலை முருகன் கோயிலில் வெள்ளிக் கதவுகள் பொருத்தும் பணிகள் நடைபெறவுள்ளன.
இந்த நிகழ்வுகளில் வணிகவரித் துறை அமைச்சா் பி.மூா்த்தி கலந்துகொள்கிறாா். விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாக ஆணையா் ராமசாமி, தக்காா் வெங்கடாசலம், கோயில் அலுவலா்கள் செய்து வருகின்றனா்.