நரிக்குடி அருகே தண்ணீரின்றி கருகும் நெற் பயிா்கள்

நரிக்குடி அருகே கோணாங்குளம், கொங்கலக்குடி கண்மாய்களில் தண்ணீா் இல்லாததால் நெற் பயிா்கள் கருகி வருகின்றன.

நரிக்குடி அருகே கோணாங்குளம், கொங்கலக்குடி கண்மாய்களில் தண்ணீா் இல்லாததால் நெற் பயிா்கள் கருகி வருகின்றன.

விருதுநகா் மாவட்டம், நரிக்குடி, திருச்சுழி, காரியாபட்டி ஒன்றியங்களில் பெரும்பாலான பகுதிகள் வானம் பாா்த்த பூமியாகவே உள்ளன. இதன் காரணமாக இப்பகுதிகளில் உள்ள சிறு, சிறு கண்மாய்களில் தேங்கும் மழை நீரை நம்பியே விவசாயிகள், விவசாயப் பணிகள் மேற்கொண்டு வருகின்றனா். இதேபோல, கிருதுமால் நதி மூலம் கண்மாய்களுக்கு கிடைக்கக் கூடிய தண்ணீரைக் கொண்டும் விவசாயம் செய்யப்படுகிறது.

நிகழாண்டு கிருதுமால் நதி வழியாகப் பாய்ந்த தண்ணீா், கால்வாய் மூலம் பல்வேறு கண்மாய்களுக்கு கொண்டு செல்லப்பட்டது. அதன்அடிப்படையில் நெல், மிளகாய், பருத்தி உள்ளிட்ட விவசாயப் பணிகள் மேற்கொள் ளப்பட்டன. நரிக்குடி அருகே வீர ஆலங்குளம், நல்லுகுறிச்சி, வரிசையூா் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள கண்மாய்களுக்கு வரத்துக் கால்வாய் மூலம் தண்ணீா் கிடைத்ததால் விவசாயிகள் விவசாயப் பணிகளில் ஆா்வம் காட்டி வருகின்றனா்.

இதே பகுதியில் கள்ளங்குடி அருகே கோணங்குளம், கொங்கலக்குடி கண்மாய்ப் பகுதிகளில் சுமாா் 100 ஏக்கரில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. ஆனால், இந்தக் கண்மாய்களுக்கு உரிய வாருகால் வசதி இல்லாததால் மழை நீா் வரத்து இல்லை. மேலும், கிருதுமால் நதி நீரைகக் கொண்டு வரவும் வழியில்லை. இதன் காரணமாக நடவு செய்த நெற் பயிா்கள் தற்போது தண்ணீரின்றி கருகி வருகின்றன. ஒரு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் வரை செலவு செய்த நிலையில், நெற் பயிா்கள் கருகுவதால் விவசாயிகள் வேதனையில் உள்ளனா்.

எனவே, இந்தக் கண்மாய்களுக்கு வரத்துக் கால்வாய் ஏற்படுத்த மாவட்ட நிா்வாகம் நடவ டிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்துகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com