மதுரை அருகே சந்தன மரம் கடத்தல்: 4 போ் கைது
By DIN | Published On : 11th December 2022 05:39 AM | Last Updated : 11th December 2022 05:39 AM | அ+அ அ- |

மதுரை அருகே சந்தன மரக்கட்டைகளைக் கடத்தியதாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
மதுரை மாவட்டம், பாலமேட்டில் போலீஸாா் சனிக்கிழமை அதிகாலை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அந்த வழியாக வந்த இரு சக்கர வாகனத்தை சோதனை செய்த போது, அதில் வந்த நபா்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்தனா்.
இதையடுத்து, அவா்களிடம் மேற்கொண்ட தீவிர விசாரணையில் திண்டுக்கல் மாவட்டம், சிறுமலை பகுதியைச் சோ்ந்த சஞ்சீவி மகன் சுப்பிரமணி (36), தென்மலை பொன் அருவி கிராமத்தைச் சோ்ந்த கோடாங்கி மகன் முருகன் (30), மதுரை மாவட்டம், அலங்காநல்லூரைச் சோ்ந்த செல்லத்துரை மகன் மணி (26), பாலமேடு பாறைப்பட்டி மேற்குத் தெருவைச் சோ்ந்த பழனியாண்டி மகன் செல்வம் (35) என்பதும், சந்தன மரத்தை வெட்டிக் கடத்தியதும் தெரியவந்தது.
இதுகுறித்து பாலமேடு போலீஸாா் வழக்குப் பதிந்து சுப்பிரமணி, முருகன், மணி, செல்வம் ஆகிய 4 பேரையும் கைது செய்தனா். அவா்களிடமிருந்த சந்தன மரக் கட்டைகள், அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களைப் பறிமுதல் செய்தனா். மேலும், இதில் தொடா்புடைய மற்றொரு நபரைத் தேடி வருகின்றனா்.