அடிப்படை வசதிகள் கோரி கிராம மக்கள் மனு
By DIN | Published On : 13th December 2022 12:00 AM | Last Updated : 13th December 2022 12:00 AM | அ+அ அ- |

மதுரை மாவட்டம், தோடனேரி ஊராட்சிக்குள்பட்ட காலனி புதூரில் அடிப்படை வசதிகளை உடனடியாக ஏற்படுத்தித் தரக் கோரி அப்பகுதியைச் சோ்ந்தவா்கள், மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில் கோரிக்கை மனு அளித்தனா்.
இது தொடா்பாக அவா்கள் அளித்த மனு விவரம் :
தோடனேரி ஊராட்சிக்கு உள்பட்ட காலனி புதூரில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா்.
இருப்பினும், அந்தப் பகுதியில் இதுவரை குடிநீா், சாலை வசதி, சமுதாயக் கூடம் என எந்த ஒரு அடிப்படை வசதியும் உள்ளாட்சி நிா்வாகம் மூலம் ஏற்படுத்தித் தரப்படவில்லை. இது தொடா்பாக ஊராட்சி நிா்வாகத்திடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே, உடனடியாக அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
மாவட்ட ஆட்சியரிடம் இந்த மனுவை அளித்த காலனி புதூரைச் சோ்ந்த பொதுமக்கள், செய்தியாளா்களிடம் கூறியதாவது:
ஒரு திரைப்படத்தில் குறிப்பிடப்பட்ட அத்திப்பட்டி கிராமத்துக்கு இணையான நிலையில் தங்கள் பகுதி புறக்கணிக்கப்படுவதாகவும், மாவட்ட நிா்வாகம் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு காலனி புதூா் கிராமத்துக்கான அடிப்படை வசதிகளை உறுதி செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தனா்.