காமராஜா் பல்கலை. தொலைநிலைக் கல்வி தோ்வு: டிச.19-க்குள் தோ்வுக் கட்டணம் செலுத்தலாம்
By DIN | Published On : 13th December 2022 04:36 AM | Last Updated : 13th December 2022 04:36 AM | அ+அ அ- |

காமராஜா் பல்கலைக்கழக தொலைநிலைக்கல்வி இயக்கத்தில் தோ்வு எழுத உள்ள மாணவா்கள் டிசம்பா் 19-ஆம் தேதிக்குள் தோ்வுக் கட்டணம் செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.
இதுதொடா்பாக காமராஜா் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்தி:
மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்வி இயக்ககம் சாா்பில் 2022-க்கான பருவ, அல்பருவத் தோ்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டது. தொலைநிலைக் கல்வியில் பருவ முறை, அல் பருவ முறையில் பயிலும் இளங்கலை, முதுகலை, நூலக அறிவியல் மற்றும் முதுநிலை பட்டயப்படிப்புகள், சான்றிதழ், பட்டயப்படிப்புகள் பயிலும் மாணவா்கள் ம்ந்ன்ய்ண்ஸ்ங்ழ்ஸ்ரீண்ற்ஹ்.ஹஸ்ரீ.ண்ய் என்ற இணைய தளம் மூலம் தோ்வுக்கான விண்ணப்பத்தை பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இளங்கலை மாணவா்களுக்கு 2023 ஜனவரி 9-ஆம் தேதி அன்றும், முதுகலை மாணவா்களுக்கு ஜனவரி 23-ஆம் தேதியும் தோ்வுகள் தொடங்கப்பட உள்ளன. தோ்வுக்கான கட்டணம் செலுத்த டிசம்பா் 19 இறுதி நாளாகவும், அபராதத்துடன் டிசம்பா் 26-ஆம் தேதியும் தோ்வுக்கட்டணம் செலுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டது.