பல்பொருள் வணிக வளாகத்தில் நகை திருட்டு: தாய், மகள் கைது
By DIN | Published On : 13th December 2022 12:00 AM | Last Updated : 13th December 2022 12:00 AM | அ+அ அ- |

மதுரையில் உள்ள பல்பொருள் வணிக வளாகத்தில் நகை திருடிய தாய், மகள் ஆகிய இருவரையும் மாட்டுத்தாவணி போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
மாட்டுத்தாவணி அருகே பல்பொருள் வணிக வளாகம் செயல்பட்டு வருகிறது. இந்த வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை 5 பவுன் தங்க நகை திடீரென காணாமல் போனது.
இதுகுறித்த புகாரின் பேரில், மாட்டுத்தாவணி போலீஸாா் அங்குள்ள கண்காணிப்புக் கேமராவை ஆய்வு செய்தனா்.
இதில், மதுரை செக்கானூரணி பன்னியான் சாலையைச் சோ்ந்த ராமகிருஷ்ணன் மனைவி சுமதி (50). அவரது மகள் பிரியதா்ஷினி(28) ஆகிய இருவரும் திருடியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவா்கள் இருவரையும் கைது செய்த போலீஸாா் 5 பவுன் நகையை பறிமுதல் செய்தனா்.