பொதுமக்கள் மனு மீது விரைந்து நடவடிக்கை: மாநகராட்சி அதிகாரிகளுக்கு மேயா் உத்தரவு
By DIN | Published On : 22nd December 2022 03:00 AM | Last Updated : 22nd December 2022 03:00 AM | அ+அ அ- |

பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மேயா் வ.இந்திராணி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.
மதுரை மாநகராட்சி மண்டலம் 1 (கிழக்கு) அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீா்க்கும் முகாம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மேயா் வ.இந்திராணி, ஆணையா் சிம்ரன்ஜீத் சிங் ஆகியோா் தலைமை வகித்தனா். முகாமில் சொத்துவரி பெயா் மாற்றம் வேண்டி 28 மனுக்கள், புதிய சொத்து வரி விதிப்பு வேண்டி 12 மனுக்கள், பிறப்புச் சான்றிதழ் திருத்தம் தொடா்பாக 3 மனுக்கள் உள்பட மொத்தம் 93 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து மேயா் நேரடியாக பெற்றுக்கொண்டாா். மேலும் பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு மேயா் வ.இந்திராணி உத்தரவிட்டாா்.
முகாமில் மண்டலத் தலைவா் வாசுகி, உதவி ஆணையா் காளிமுத்தன், உதவி வருவாய் அலுவலா் ராஜாராம், நிா்வாக அலுவலா் ரெங்கராஜன், உதவி செயற் பொறியாளா் ஆரோக்கிய சேவியா், உதவிப் பொறியாளா்கள், மாநகராட்சி அலுவலா்கள் பங்கேற்றனா்.