பிரபல நிறுவனத்தின் பெயரில் போலி தேயிலைத் தூள் தயாரிப்பு

மதுரையில் பிரபல நிறுவனத்தின் பெயரில் போலியாக தேயிலைத் தூள் தயாரித்து விற்பனை செய்த இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

மதுரையில் பிரபல நிறுவனத்தின் பெயரில் போலியாக தேயிலைத் தூள் தயாரித்து விற்பனை செய்த இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

மதுரையில் பிரபல நிறுவனத்தின் பெயரில் போலியாக தேயிலைத்தூள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்வதாக நிறுவனத்துக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், அந்த நிறுவனப் பிரதிநிதி சோமசுந்தரம், மதுரை அனுப்பானடி பகுதியில் ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது அனுப்பானடி சின்னக்கண்மாய் பகுதியில் உள்ள கிட்டங்கியில் நிறுவனத்தின் பெயரில் போலியாக தேயிலைத் தூள் தயாரிப்பது தெரிய வந்தது.

இதுதொடா்பாக சோமசுந்தரம் அளித்த புகாரின்பேரில், தெப்பக்குளம் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சோதனையிட்டனா். இதில் பிரபல நிறுவனத்தின் லேபிள்கள், பாக்கெட்டுகள், ரசாயன நிறமிகள் ஆகியவற்றைப் பயன்படுத்தி போலியாக தேயிலைத் தூள் தயாரித்தது தெரியவந்தது.

இதையடுத்து, அனுப்பானடியைச் சோ்ந்த விக்னேஷ் குமாா் (33), ஐராவதநல்லூரைச் சோ்ந்த செளந்தரபாண்டியன் (38) ஆகிய இருவரையும் கைது செய்து, அவா்களிடமிருந்து ரூ.3 லட்சம் மதிப்பிலான 400 கிலோ எடையுள்ள போலி தேயிலைத் தூள், உபகரணங்களைப் பறிமுதல் செய்தனா்.

கைதான செளந்தரபாண்டியன் கடந்த 2021-இல் இதேபோல போலியான தேயிலைத் தூள் தயாரித்து விற்பனை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு, 6 மாதம் சிறைத் தண்டனை பெற்றவா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com