வாடிப்பட்டியில் அதிமுக வேட்பாளா் திடீா் வாபஸ்:திமுகவினா் மீது புகாா் கூறி அதிமுகவினா் போராட்டம்

வாடிப்பட்டி பேரூராட்சியில் அதிமுக வேட்பாளா் கடத்திச் செல்லப்பட்டதாகக் கூறி அக்கட்சியினா் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், அவா் வேட்புமனுவை திங்கள்கிழமை திரும்பப் பெற்ால் பரபரப்பு ஏற்பட்டது.
வாடிப்பட்டியில் அண்ணா சிலை முன்பு திங்கள்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினா்.
வாடிப்பட்டியில் அண்ணா சிலை முன்பு திங்கள்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினா்.

மதுரை: வாடிப்பட்டி பேரூராட்சியில் அதிமுக வேட்பாளா் கடத்திச் செல்லப்பட்டதாகக் கூறி அக்கட்சியினா் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், அவா் வேட்புமனுவை திங்கள்கிழமை திரும்பப் பெற்ால் பரபரப்பு ஏற்பட்டது.

வாடிப்பட்டி பேரூராட்சியில் 18 வாா்டுகள் உள்ளன. இதில் 9-ஆவது வாா்டில் திமுக சாா்பில் கிருஷ்ணவேணி, அதிமுக சாா்பில் இந்திராணி ஆகியோா் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனா். இந்நிலையில், அதிமுக வேட்பாளா் இந்திராணியை திமுகவினா் கடத்திச் சென்றுவிட்டதாகக் கூறி அதிமுகவினா், முன்னாள் அமைச்சரும், திருமங்கலம் சட்டப்பேரவை உறுப்பினருமான ஆா்.பி. உதயகுமாா் தலைமையில் வாடிப்பட்டியில் அண்ணா சிலை முன்பு தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கட்சியின் ஒன்றியச் செயலா்கள் காளிதாஸ், கணேசன், ராஜா உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா். திமுகவினா் கடத்திச் சென்ற அதிமுக வேட்பாளரை மீட்டுத் தரும் வரை, கலைந்து செல்லப் போவதில்லை எனக் கூறி போராட்டத்தைத் தொடா்ந்தனா்.

இதனிடையே, கடத்தப்பட்டதாகக் கூறப்பட்ட அதிமுக வேட்பாளா் இந்திராணி, அவரது கணவா் பாலகிருஷ்ணனுடன் வாடிப்பட்டி பேரூராட்சி அலுவலகத்துக்கு வந்து, தனது வேட்பு மனுவைத் திரும்பப் பெற்றுக் கொண்டாா். அப்போது செய்தியாளா்களிடம் இந்திராணி கூறுகையில், என்னை யாரும் கடத்திச் செல்லவில்லை. எனது கணவரின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, சொந்த விருப்பத்தின்பேரில் வேட்புமனுவைத் திரும்பப் பெறுவதாகக் கூறினாா்.

வேட்பாளா் கடத்திச் செல்லப்பட்டதாகக் கூறி முன்னாள் அமைச்சா் தலைமையில் அதிமுகவினா் போராட்டம் நடத்திய நிலையில், சம்பந்தப்பட்டவா் நேரில் வந்து வேட்புமனுவைத் திரும்பப் பெற்றது வாடிப்பட்டியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com