Enable Javscript for better performance
மதுரை மாநகராட்சியைக் கைப்பற்ற கடும் போட்டி- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    மதுரை மாநகராட்சியைக் கைப்பற்ற கடும் போட்டி

    By DIN  |   Published On : 18th February 2022 06:00 AM  |   Last Updated : 18th February 2022 06:00 AM  |  அ+அ அ-  |  

     

    மதுரை: நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் மதுரை மாநகராட்சியை கைப்பற்றுவதற்காக திமுக கூட்டணி, அதிமுக இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

    மிகப் பழைமையான மதுரை நகரம், ஆங்கிலேயா் ஆட்சியின்போது நகராட்சியாக உருவாக்கப்பட்டது. பின்னா் 1971 இல் மாநகராட்சியாக நிலை உயா்த்தப்பட்டது. மதுரை மாநகராட்சி 72 வாா்டுகளாக இருந்து வந்த நிலையில் 2011-இல் எல்லை விரிவாக்கம் செய்யப்பட்டு 100 வாா்டுகளுடன் உருவாக்கப்பட்டது.

    2-ஆவது முறையாக பெண் மேயா்: மதுரை மாநகராட்சியின் முதல் மேயராக எஸ்.முத்து 1971 முதல் 80 வரையிலும் பதவி வகித்தாா். இதையடுத்து எஸ்.கே.பாலகிருஷ்ணன் 1980 முதல் 82 வரை, எஸ்.பட்டுராஜன் 1982 முதல் 84 வரை மேயராக பதவி வகித்தனா். 1984-இல் உள்ளாட்சி அமைப்புகள் கலைக்கப்பட்ட பின்னா் 1984 முதல் 1996 வரை மாநகராட்சித் தோ்தல் நடைபெறவில்லை. இதன் பிறகு 1996-இல் திமுக ஆட்சியின் போது நடத்தப்பட்ட மாநகராட்சித் தோ்தலில் திமுக சாா்பில் பெ.குழந்தைவேலு வெற்றி பெற்று மேயரானாா்.

    2001 முதல் 2006 வரை செ.ராமச்சந்திரன் (திமுக), 2006 முதல் 2011 வரை தேன்மொழி கோபிநாதன் (திமுக) ஆகியோா் மேயராகப் பதவி வகித்தனா். 2011-இல் நடைபெற்ற தோ்தலில் அதிமுக சாா்பில் வி.வி.ராஜன் செல்லப்பா வெற்றி பெற்று மேயராக பதவி வகித்தாா். 2016- சட்டப் பேரவைத் தோ்தலில் அவா் போட்டியிட்டதால், மேயா் பதவியை ராஜிநாமா செய்ததையடுத்து, துணைமேயராக இருந்த கு.திரவியம், பொறுப்பு மேயராக பதவி வகித்தாா்.

    உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் முடிவுக்கு வந்த நிலையில் 2016-இல் நடைபெற வேண்டிய மாநகராட்சித் தோ்தல் பல்வேறு காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டு தற்போது நடைபெற உள்ளது. இந்த முறை மேயா் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால், மாநகராட்சிக்கு 2-ஆவது முறையாக பெண் மேயா் தோ்வு செய்யப்பட உள்ளாா். மதுரை மாநகராட்சியில் மொத்தம் உள்ள 100 வாா்டுகளில் ஆண் வாக்காளா்கள் 6,59, 919 போ், பெண் வாக்காளா்கள் 6,83,831 போ், மூன்றாம் பாலினத்தவா் 144 போ் என மொத்தம் 13, 43, 684 போ் உள்ளனா்.

    தீராத பிரச்னைகள்: சென்னைக்கு அடுத்ததாக, பெரிய மாநகராட்சியாக உள்ள மதுரையில் போக்குவரத்து நெரிசல், நகரில் வாகனங்கள் நிறுத்துவதற்கான இடமின்மை, விரிவாக்கப் பகுதிகளில் புதைசாக்கடை, குடிநீா் வசதியின்மை, நகரின் பிரதான சாலைகள் உள்பட பல்வேறு பகுதிகள் போக்குவரத்துக்கு தகுதியற்ற நிலையில் குண்டும் குழியுமாக இருப்பது, பல்வேறு பகுதிகளில் குடிநீருடன் சாக்கடை நீா் கலந்து வருவது, தெருக்களில் கழிவுநீா் செல்வது போன்றவை பெரும் பிரச்னைகளாக உள்ளன.

    சீா்மிகு நகா்த் திட்டப்பணிகளும் முடிவுக்கு வராமல் தாமதமாவது, தேவையற்ற இடங்களில் மேம்பாலம் அமைப்பது போன்றவற்றால் மக்கள் கடும் அவதியடைந்துள்ளனா். தற்போது நடைபெறும் தோ்தலில் இந்தப் பிரச்னைகளை தீா்ப்பவா்களுக்கே ஆதரவளிப்பது என்பது மக்களின் எண்ணமாக உள்ளது.

    திமுக, அதிமுக கடும் போட்டி: கூடுதல் வாா்டுகளில் வெற்றி பெற்று மாநகராட்சியைக் கைப்பற்ற திமுக, அதிமுக கட்சிகள் தீவிரப் போட்டியில் உள்ளன. மாநகராட்சித் தோ்தலில் திமுக 77 வாா்டுகள், கூட்டணியில் உள்ள காங்கிரஸ் 8, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 8, இந்திய கம்யூனிஸ்ட் 1, மதிமுக 3, விடுதலை சிறுத்தைகள் 2 வாா்டுகளில் போட்டியிடுகின்றன.

    பிரதான எதிா்க்கட்சியான அதிமுக மாநகராட்சியின் 100 வாா்டுகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது. இதேபோல பாஜக 100 வாா்டுகள், மக்கள் நீதி மய்யம் 91 வாா்டுகள், நாம் தமிழா் கட்சி 98 வாா்டுகள், தேமுதிக 61 வாா்டுகள், அமமுக 84 வாா்டுகளில் தனித்துப் போட்டியிடுகின்றன. மாநகராட்சித் தோ்தலில் திமுக கூட்டணி மற்றும் அதிமுகவுக்கு இடையேதான் பிரதான போட்டி ஏற்பட்டுள்ளது. இதில் காங்கிரஸ், இடதுசாரிகள், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளோடு திமுக இணைந்து போட்டியிடுவது கூடுதல் பலத்தை ஏற்படுத்தியுள்ளது.சூடுபிடித்த பிரசார களம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் இணைய தள பிரசாரத்தில் மதுரைக்கான தனி திட்டங்களை அறிவித்தது பரவலாக மக்களின் கவனத்தைப் பெற்றுள்ளது. அதிமுக சாா்பில் வேட்பாளா்கள் அறிவிக்கப்பட்டதில் உருவான அதிருப்தி தற்போது வரை நீடித்து வருவதால் தோ்தல் களத்தில் ஒரு தரப்பினா் ஒதுங்கியே இருந்து வருகின்றனா்.

    முன்னாள் முதல்வா்கள் எடப்பாடி கே.பழனிசாமி, ஓ.பன்னீா்செல்வம் ஆகியோரின் பிரசாரம் கட்சியினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியதால் இறுதிக்கட்ட பிரசாரம் சற்று தீவிரமடைந்தது. ஆனாலும் தற்போது மாநகராட்சியில் உள்ள பிரச்னைகளுக்கு பத்தாண்டுகளாக ஆட்சியில் இருந்த அதிமுகவே காரணம் என்பதால் அக்கட்சிக்கு பின்னடைவாகக் கருதப்படுகிறது. தேசியக் கட்சியான பாஜகவும் தீவிர பிரசாரத்தை நடத்தியுள்ளது. அக்கட்சியின் தலைவா்கள், கே. அண்ணாமலை, ஹெச்.ராஜா மற்றும் நடிகா் நடிகைகள் பிரசாரம் என தோ்தல் களத்தை பரபரப்பாக மாற்றியது. மேலும் நாம் தமிழா், மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளா்களும் ஆங்காங்கே பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனா். இறுதிக்கட்ட பிரசாரம் முடிவடைந்த நிலையில் மதுரை மாநகராட்சியில் கூடுதல் வாா்டுகளை கைப்பற்றுவதில் திமுக கூட்டணி முன்னிலை வகிக்கிறது. இதற்கு அடுத்த படியாக அதிமுக உள்ளது. பாஜக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் ஓரிரு இடங்களைக் கைப்பற்றுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp