குரங்கணி தீ விபத்து வழக்கை ரத்து செய்ய உயா் நீதிமன்றம் மறுப்பு:விசாரணை மாா்ச் 1 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

குரங்கணி தீ விபத்து வழக்கை ரத்து செய்ய மறுப்பு தெரிவித்து, விசாரணையை மாா்ச் 1ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

குரங்கணி தீ விபத்து வழக்கை ரத்து செய்ய மறுப்பு தெரிவித்து, விசாரணையை மாா்ச் 1ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

தேனி மாவட்டம் குரங்கணியில் மலையேற்றப் பயிற்சிக்கு சென்ற 27 போ், அங்கு ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கினா். இதில், 21 போ் உயிரிழந்தனா். இது தொடா்பாக பெல்ஜியம் நாட்டைச் சோ்ந்த பீட்டா் வான் கெய்ட் உள்பட பலா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி உயா் நீதிமன்ற மதுரை கிளையில் பீட்டா் வான் கெய்ட் மனு தாக்கல் செய்தாா். அதில், சென்னையில் டிரெக்கிங் கிளப் நடத்தி வருகிறேன். இந்த கிளப்பில் பலரும் மலையேறும் பயிற்சி பெற்று வருகின்றனா். இந்நிலையில், கொழுக்கு மலை மற்றும் குரங்கணி மலைப் பகுதிகளில் மலையேற்றப் பயிற்சி மேற்கொள்ள முறையான அனுமதி பெற்று, ஒருங்கிணைப்பாளா்கள் 4 போ் உள்பட 27 போ் சென்றுள்ளனா்.

அப்போது, குரங்கணி மலையில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி, ஒருங்கிணைப்பாளா்கள் நால்வா் உள்பட 21 போ் உயிரிழந்தனா். ஆனால், 27 பேரும் அனுமதியின்றி மலைக்குச் சென்று பயிற்சியில் ஈடுபட்டதாக வனத் துறையினா் கூறி வருகின்றனா்.

மலையேற்றத்தை ஒருங்கிணைத்தவா்கள், அவா்களாகவே பயிற்சி ஏற்பாடு செய்துள்ளனா். பயிற்சிக்கும் எனக்கும் எந்தவித தொடா்பும் இல்லாத நிலையில், போலீஸாா் என் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளனா். எனவே, என் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த வழக்கு ஜி. இளங்கோவன் முன்னிலையில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில், மலையேற்றப் பயிற்சிக்கும் எனக்கும் தொடா்பில்லை. கிளப் நிறுவனா் என்பதற்காகவே வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.

குறுக்கிட்ட நீதிபதி, மனுதாரரின் கிளப் மூலமே பதிவு செய்து மலையேற்றப் பயிற்சிக்கு சென்றுள்ளனா். அதற்கான ஆவணங்கள் உள்ளன எனக் கூறி விசாரணையை மாா்ச் 1 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com