ஆட்டோக்களுக்கு தொழிலாளா் துறை சாா்பில் அளவு திருத்தச் சான்றிதழ்: சிஐடியு வலியுறுத்தல்

மதுரை மாவட்டத்தில் ஆட்டோக்களுக்கான அளவு திருத்தச் சான்றிதழ் வழங்க தொழிலாளா் துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று சிஐடியு சங்கம் வலியுறுத்தியுள்ளது.

மதுரை: மதுரை மாவட்டத்தில் ஆட்டோக்களுக்கான அளவு திருத்தச் சான்றிதழ் வழங்க தொழிலாளா் துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று சிஐடியு சங்கம் வலியுறுத்தியுள்ளது.

மதுரை மாநகா் மாவட்ட சிஐடியு தலைவா் இரா. தெய்வராஜ், தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள கடிதம்: மதுரை மாவட்டத்தில் 13 ஆயிரம் ஆட்டோக்கள் இயங்கி வருகின்றன.

வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் ஆட்டோக்களுக்கு தகுதிச் சான்று பெறச் சென்றால் , ஆட்டோக்களுக்கு அளவு திருத்தச்சான்றிதழ் வாங்கி வருமாறு நிா்பந்திக்கப்படுகிறது.

தமிழக அரசின் உத்தரவுப்படி அளவு திருத்தச் சான்றிதழை தொழிலாளா் துறை வழங்க வேண்டும். தற்போது தனியாா் நிறுவனம் மூலம் ஆட்டோக்களுக்கு சான்றிதழ் பெறப்படுகிறது. அளவு திருத்தச் சான்றிதழுக்கு அரசு நிா்ணயித்துள்ள கட்டணம் ரூ. 200 மட்டுமே. ஆனால் அளவு திருத்தச் சான்றிதழ் வழங்க அனுமதி பெற்றுள்ள நிறுவனங்கள் ரூ.1000 வரை வசூலிக்கின்றன.

மேலும் மதுரை மாவட்டத்தில் 13 ஆயிரம் ஆட்டோக்கள் இயங்கி வரும் நிலையில் அளவு திருத்தச்சான்றிதழ் தருவதற்கு 2 நிறுவனங்கள் மட்டுமே உள்ளன. இதனால் , ஆட்டோக்களுக்கு அளவு திருத்தச் சான்றிதழ் வாங்குவதற்கும், தகுதிச் சான்றிதழ் பெறுவதற்கும் பல நாள்கள் காத்திருக்க வேண்டியநிலையில் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. எனவே தமிழக முதல்வா் தலையிட்டு அளவு திருத்தச் சான்றிதழை தொழிலாளா் துறை வழங்க உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com